பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

  • அங்களு! எங்குற்ருய் என்று தேடிய வானேர் சேர்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் அரசே ' என்னும் சுந்தரர் தேவார வாக்கு உணர்த்தும். இத்தலத்திலேயே நம் ரீ வைஷ்ணவி ஆலயம் அமைந்தது மேலும் சிறப்பாம்.

VIII. தேவி வழிபாடு தேவியின் வழிபாடு வெள்ளிக் கிழமைகளிலும், பெளர்ணமி தினங்களிலும், மற்றும் ரீ சேஷாத்ரி, ரீ ரமணர், வள்ளிமலை சுவாமிகள், பூரீ அருணகிரிநாதர் ஆகியோரது ஜயந்தி தினங்களி லும், மற்றும் பல குறிப்பிட்ட தினங்களிலும், அபிஷேகம், சக்தனக் காப்பு, புஷ்பாலங்காரம், லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனை லலிதா த்ரிசதீ அர்ச்சனை முதலியவற்றுடன் நடந்து வருகிறது. நவராத்ரி தினங்களில் லகrார்ச்சனையுடன் விசேட வழிபாடு நடந்து வருகிறது. -- IX. தேவியும் பூர நகூத்திரமும் ஒருநாள், ஆலயத்தில் கொண்டாட வேண்டிய விசேஷ வைபவங்களுக்காக ஒரு நிகழ்ச்சி நிரலை அன்பர் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் தேவிக்குகந்த நாளாம் ஆடிப் பூரத்தை யும் சேர்த்தார். ஆடிப் பூரத்தின் தனிப் பெருமை என்னவென்று அவருக்கே தெரியாது. ஏதோ சேர்த்து விட்டார். =. சேர்த்த சிலநாள் கழித்து அன்பர் ஒரு கனவு கண்டார். ஆதி சங்கரர் ப்ரசன்னமாகி ' ஆடிப் பூரத்தை மட்டும் கொண்டாடினல் போதாது. எல்லாப் பூரத்தையும் கொண்டாட வேண்டும் !" எனக் கூறியருளினர். சங்கர பகவத்பாதாள் இட்ட கட்டளையின் அடிப் படைத் தத்துவம் என்ன என்று அறிய ஆவலுண்டாயிற்று. அன்பருடனேயே வசித்துக் கொண்டு, வழிபாட்டுக்குப் பேருதவி புரிந்து வரும் ஒரு பக்தர் அடிக்கடி காஞ்சி சென்று காம கோடி ஜகத்குருவைத் தரிசித்து வருவது வழக்கம். பூரங்கூத்ரத்தின் தத்துவத்தை ஜகத்குருவிடமிருந்து தெரிந்து வரும்படி அன்பர் அவர்ை வேண்டிக் கொண்டார். தனது கனவைப் பற்றி அவரிடம் சொல்லவில்லை. பக்தரும் 26-3-1957-ல் ஜகத்குருவைத் தரிசித்துப் பூரநட்சத்திரத்தின் மகிமையை விளக்குமாறு பிரார்த்தித்தார். ஆனல் ஜகத்குருவோ பின்ைெரு சமயம் அதைப் பற்றிச் சொல்வ தாகப் பதிலளித்தார்.