பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii தது. ஆலயங்கள் பல நிறுவி ஈடுஇண்ையிலாத பரமசிவபக்தனை இவ் வேந்தன் ஒரு சமயம் கடம்பர் குறும்பர் என்பவர்களோடு போர் செய்து, தோற்றுத் தன் யானை மீதேறிக்கொண்டு உயிர்தப்ப ஓடி வரும்பொழுது, யானையின் கால்களை முல்லைக்கொடிகள் சுற்றிக் கொண்டு மேலே செல்ல வொட்டாமல் தடைப்படுத்தின. அரசன் அக்கொடிகளைத் தனது வாளில்ை வெட்டி அகற்றின்ை. வெட்டிய இடத்தினின்றும் இரத்தம் பெருகியது. அரசன் திடுக்கிட்டுக் கொடிகளைப் புரட்டிப்பார்க்க, அங்கு ஓர் சிவலிங்கத்தையும் அதன் உச்சியில் தனது வாளின் வடுவினையும். அதனின்று குருதிபெருகு வதையும் கண்டு உளம்நொந்து, அதே வாளில்ை இவ்வபசாரத் திற்கு ஆளான தன் உயிரை மாய்த்துக்கொள்ள எத்தனிக்கையில், சிவபிரான் வெளிப்பட்டு அஞ்சற்க! உனது வாள் என்னை ஊறு படுத்தாது ; நான் மாசிலாமணி’ என அறிந்துகொள் ; உனது பகைவர்களை அழிக்கச் செய்கிறேன்” எனத் திருவாய்மலர்ந்தருளி அபயமளித்து ஆண்டு அருள்புரிந்தார். நந்தி பகவானும் சிவகணங் களுக்குத் தலைமை தாங்கிப் போர்க் கோலம் பூண்டு பகைவர்களே ஒழித்தார். எனவே இத்தலத்து நந்தி ஏனைய தலங்களிலுள்ளவை போல் சிவனை நோக்காமல் எதிர்நோக்கியுள்ளது. தொண்டை மானும் தனது பகைவர்களிடமிருந்து கிடைத்ததும் இன்றும் தெய் விகவெற்றிச் சின்னமாகக் கம்பீரமாக விளங்குவதுமான இருவெள் ளெருக்குத் தூண்களைத் தாபித்து இவ் வாலயத்தை அழகு பொலிய மிக்கவனப்புடன் கட்டி வழிபட்டான். ஆகம விதிப்படி இக்கோயில் யானையின் பின்புறம் போன்றவளைவும் அழகும் கொண்டது. இதனை "கஜப்ருஷ்ட ஆகாரம்' எனவும் கூறுவர். 'சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே' எனப்போற்றுகின் ருர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். -- சுந்தரர் தேவாரம், அருணகிரிநாதர் திருப்புகழ் முதலிய பழங் தமிழ் மறைகளில் போற்றப்பெறும் இத்தெய்விகத் தல மகிமையை, இராமலிங்க வள்ளலார், இரட்டையர் முதலிய பல அநுபூதிச் செல்வர்களும் பாடிப் பரவி யுள்ளனர். புராதனக் கல்வெட்டுச் சாசனங்கள் பல இத்தலத்தின் புகழை ஏத்துகின்றன. தேவர் -- *r == ங் களெல்லாம் தேடி வந்து, சிவபிரான் எங்குற்ருர் என்று காதுை. கடைசியில் வடதிரு முல்லை ஆவாயிலில் இருக்கக் கண்டதை