பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii நீடுழிகாலம் நம்முடன் வாழ்ந்து அவர் தம் பெயரும், புகழும், போத மும் என்றென்றும் நிலைத்திருக்கப் பொங்கியிடம் பூஜை செய்து நான் பிரார்த்தித்துக் கொள்ளப்போகிறேன்" என்றும் தெரிவித்தார். திருவண்ணுமலையிலிருந்து வந்த அன்பரைப் புதன்கிழமை காலையில் வந்தவுடனேயே மறுபடியும் திருவண்னமலைக்குப் போகும்படி உத்தரவிட்டார். 14-4-1950-அன்றும் சுவாமிகள் அன்பரது வீட்டுக்கு வந்து அன்றிரவு பொங்கி பூஜை செய்தார். பூஜை முடித்ததும் திருவண்ணுமலைக்குப் புறப்பட்டு விட்டார். பிரதிஷ்டை செய்தபின் இந்த நாளில்தான் வள்ளிமலை ஸ்வாமிகள் பொங்கியின் பூஜையைத் தாமே செய்தார். இதே தினத்தில் தான் பூரீரமண பகவானும் விதேக கைவல்யம் எய்தினர். பிறகு வள்ளிமலை ஸ்வாமிகளின் ஸ்மாதிக்குப்பின்னரும் தேவி, அன்பரது இல்லத்தின் முன்புறத் தோட்டத்து மகிழமரத்தடி யிலேயே காட்சியளித்துக்கொண்டு வீற்றிருந்தாள். VII. செந்திரு வாழும் வடதிருமுல்லைவாயில் அன்பர் தமது வாசஸ்தலத்தைப் பாடல் பெற்ற சிவஸ் தலமாகிய வடதிருமுல்லை வாயிலுக்கு அருகில் உள்ள "பாகோ பார்மில்' (Bago Farm) ஏற்படுத்திக் கொண்டார். 1945-இல் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு அன்புவழிபாடு தவருமல் நடந்து வந்த விக்ரஹத்தை மயிலையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் வெகுகாலம் இருந்ததில்லை. ஆனல் தேவியே தனக்கென அமைதியான சூழ்நிலையில் மனோஹரமான ஆலயத்தை அமைத்துக் கொள்ள உளம் கொண்டாள் போலும். 1953-ஆம் ஆண்டு தீபாவளியன்று மயிலாப்பூரில் இல்லத்திலிருந்து தேவியை எடுத்துவந்து "பாகோ பார்மில் ஒரு சிறு குடிலைக்கட்டி அதில் பிரதிஷ்டை செய்தார். அன்று வள்ளிமலைத் திருப்புகழ்ச் சச்சிதா நந்த சுவாமி சபையாரால் திருப்புகழ்வேத பாராயணம் நடை பெற்றது. L. . சென்னையிலிருந்து 12 மைல் மேற்கில் அம்பத்துாருக்கும் ஆவடிக் கும் மத்தியில் அமைந்துள்ள இம்மஹாசிவக்ஷேத்திரம் பண்ன்ட்க் காலத்தில் தொண்டைம்ான்எேன்னும் அர்சன் ஆட்சிக்குட்பட்டிருந்'