பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi 'தற்சமயம் வெள்ளிக்கிழமைதோறும் நடத்திவரும் பூஜையே போதும். அதுவே திருப்திகரமாய் இருக்கிறது. நீ ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். பொங்கி மிகவும் செளம்யமான தெய்வம். கோடைக்காலத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை செய்துவரும் நைவேத்தியத்துடன் தயிர் அன்னம் நிவேதனம் செய்வாயாயின் பொங்கிக்குப் பரம திருப்தியாயிருக்கும்' என்ருர். பின்னர், நவராத்ரியின்போது ஒருநாள் பிரதிஷ்டைக்கரீக சுவாமிகள் அன்பரையும் அவர் தாயாரையும் கலந்துகொண்டு ஏற்பாடு செய்தார். ஒரு குறிப்பிட்ட நன்ளிைல் திருப்புகழ்பாடச் சில பெண்களையும் உடன் அழைத்து வந்தார். சிவப்பான புடவைவாங்கி வரும்படி உத்தரவிட்டார். அச் செலவைச் சுவாமி கள் தாமே மேற்கொள்ள வேண்டுமென்றும், அன்பர் கொடுக்கக் கூடாதென்றும் தெரிவித்தார். பிறகு ஒரு குறக்குலமங்கையை அழைத்துவரச் சொன்னர். தம்முடன் வந்த மற்றைய தாய்மார் களுடன் சேர்ந்து திருப்புகழ்ப் பாராயணத்தை நடத்தினர். பிறகு ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தாமும் தனியாகப் பாராயணம் செய்தார். ஒரு திருப்புகழ்ப் பாடலை மட்டும் நெஞ்சு நெக்குருக மிக உரத்த குரலில் லயித்துப் பாடினர். அன்பர் கண் களினின்றும் ஆநந்த நீர் பெருகியது. பிறகு சுவாமிகள் வைஷ்ணவி தேவியை மூன்றுமுறை வலம் வந்து, தாம் அழைத்து வரச்சொன்ன குறத்திக்கு அந்தப் புடவையைக் கொடுத்துவிட்டு, என் பொங்கிப்பிரதிஷ்டை முடிந்துவிட்டது என்றும் தெரிவித்தார். VI. பகவான் ரீரமணர் வள்ளிமலை சுவாமிகள் 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூரீபகவான் ரமண மஹரிஷிகள் நோய்வாய்ப் பட்டிருந்த சமயத்தில் வைத்திய நிபுணர்கள் தந்த மருந்துகளைத் திருவண்னமலைக்கு எடுத்துப்போகும் விஷயத்தில் ஈடுபட்டிருந்த அன்பரை “இந்த வெள்ளிக்கிழமைப் பூஜைக்கு நீ இங்கே வரவேண்டாம். கான் அந்தப் பூஜையை முடித்து விடுகின்றேன்” என்று சொல்லி, "மஹ ரிஷிகளுடைய பெரிய நிலையை அறிந்தவர்கள் வெகுசிலரே ச அவரைச் சாதாரண மஹான் என்று நினைக்கக்கூடாது. அவர் மறைவதனால் உலகத்திற்கே பெருத்த கஷ்டம். அவர் இன்னும்