பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V வைஷ்ணவி என வழங்கினர்கள். அதைப் போலவே இச் சிலையும் பொலிவுடன் இருப்பதால் இந்த மூர்த்தியையும் அவ்வாறே பெயரிட்டழைக்க எண்ணினேன் ' என்று சுவாமிகள் கூறினர். அன்று முதல் தேவிக்கு ைவ ஷ் ண வி என்ற பெயர் வழங்கலாயிற்று. V. வள்ளிமலை சுவாமிகளின் ப்ரதிஷ்டை பிறகு 1948-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் சுவாமிகள் உறுதியுடன், அன்பரிடம் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். நான் உன் மீது ஒரு பாரத்தைப் போட அபிப்பிராயப் படுகி றேன். நீ என்ன சொல்லுகிருய் !”

  • சுவாமீ ! என்னுல் தாங்கக் கூடிய பாரமானுல் நான் எடுத்துக் கொள்கிறேன்.'

" ஏண்டா ! உன்னல் தாங்க முடியாத பாரத்தை உன்மீது போடுவேன !' என்று கூறிவிட்டுப் பேச்சை முடித்து விட்டார். அப் பாரம் என்ன என்று விளக்கிக் கூறவுமில்லை. அவ்விஷயத்தை அன்பரும் நாளடைவில் மறந்து விட்டார். 1949-ஆம் ஆண்டு நவராத்திரிக்கு முன்னதாக சுவாமிகள் ஒருநாள் வந்து பின்வரு மாறு அன்பரிடம் கூறினர். நான் வள்ளிமலையில் இருந்த காலத்தில் என்னுடைய இஷ்ட தேவதையைப் பிரதிஷ்டை செய்து பூஜித்துவந்தேன். (வள்ளி யம்மையை பொங்கி ' என்று பெயரிட்டும் வழங்கினர் அவர்.) அவ்வம்மையைச் சென்னையில் ஜெனரல் ஆஸ்பத்திரியில் பின் பக்கத்தில் உள்ள சிறிய கோயிலில் பிரதிஷ்டை செய்திருக்கின் றேன். ஆனல் அந்த இடம் சுத்தமாக இல்லாததால் என் மனத் திற்குத் திருப்தியாக இல்லை. எனக்கு அந்தத் தெய்வத்தை இந்த வைஷ்ணவி மூர்த்தத்தில் ஆவாஹனம் செய்யலாம் என்ற விருப்பம் இருக்கிறது. என்ன சொல்லுகிருய்?' என்று கேட்டார். நான் வெள்ளிக் கிழமை தோறும் ..த்திவரும் பூஜையைப் பார்த்திருக்கிறீர்கள்! அந்த மாதிரி பூஜை செய்யத் தான் எனக்கு அவகாசம் உண்டு. எனக்குத் திருப்புகழ் பாடவோ, படிக்கவோ தெரியாது. மேற்கொண்டு ஏதாவது செய்ய வேண்டுமானல் என்னல் முடியாது என்று அன்பர் பதில் தெரிவித்தார். o வள்ளிமலை வள்ளல்;பக்கம் 131-132.