பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv பிறகு, வந்திருந்த லக்ஷ்மி உபாஸ்கர் அன்பரைப் பார்த்து "தாங்கள் நாள்தோறும் பூஜை செய்ய அவகாசமிராது என்பது எனக்குத் தெரியும், அடியேன் ப்ரதிஷ்டை செய்ததால் ஒரே ஒரு விஷயம் மட்டும் தங்களிடம் கூற விரும்புகிறேன். அதாவது வெள்ளிக்கிழமைகள் தோறும் சுத்தோதக (அதாவது தண்ணீர்) அபிஷேகமாவது செய்து புஷ்பங்களால் அலங்கரித்து, லக்ஷ்மி அஷ்டோத்ரம் பாராயணம் செய்து, பால் அல்லது பழம் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வழிபாடே போதுமானது; எனக்கும் திருப்தி யாக இருக்கும்" என்று கூறினர். அன்பரும் அவ்வாறே செய்து வருவதாக ஒப்புக் கொண்டார். அக் காலத்தில் அன்பருக்கு விக்ரக ஆராதனையில் அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. ஆலுைம் ' மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் ' என்றபடி பெரியோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதனை நடத்திவந்தார். என்னே தேவியின் கருணை அக் கணத்திலேயே, அன்னை அன் பரைத் தடுத்தாட்கொண்டு தனது பணிக்கு ஆளாக்கிக் கொண்டு விட்டாள். ஆரம்பத்தில் பூஜை மிக எளிய முறையில் இருந்தது. நாளடைவில் பூஜை வெகு விமரிசையாகவும் விரிவாகவும் நடந்தது. நண்பர்களும், வழிப்போக்கர்களும், அக்கம் பக்கத்து வீட்டாரும் வெள்ளிக்கிழமை பூஜையில் கலந்துகொண்டு களித்தனர். சில நாட்களில் லலிதா ஸ்ஹஸ்ர காம பாராயணம் முதலிய விரிவான முறைகள் மேற்கொள்ளப்பட்டன. பூஜை மட்டும் தவருது கடந்து வந்தது. IV. வைஷ்ணவி அன்பரது இல்லத்துக்கு மகான் ரீ வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமிகள் சென்னை வரும் சமயங்களில் அடிக்கடி விஜயம் செய் வார். சுவாமிகள் அன்பரிடம் பேசும் சமயங்களில் மகிழ மரத்தடி யில் வீற்றிருக்கும் தேவியின் செளந்தர்யத்தையும் சாங்கித்யத் தையும் குறித்து மிக மிகப் புகழ்ந்து பேசுவார். " வைஷ்ணவி அழகாய் இருக்கிருள் ' என்றும் சொல்லுவார். அத் தெய்வத்திற்கு வைஷ்ணவி என்று ஏன் பெயரிட்டீர்கள் ? என அன்பர் வினவிய தற்கு, : இம் மூர்த்தி போல ஒரு தேவி விக்ரஹத்தை நான் வடதேச யாத்திரையில் காஷ்மீரத்தில் கண்டிருக்கிறேன் , அதனே