பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii இது ' எனக்கூறி, ' இதை ஓரிடத்தில் ப்ரதிஷ்டை செய்து பூசிக்க வேண்டும் ' என்றும் கட்டளையிட்டார். வயதிலும், அநு பவத்திலும், ஆற்றலிலும், தெய்வ பக்தியிலும் உயர்ந்த அப் பெரியாரின் வார்த்தைக்கு இணங்கி, அச்சிலையைப் பிரதிஷ்டை செய்வதாக அன்பரும் ஒப்புக்கொண்டார். III. முதல் பிரதிஷ்டை அன்பர் வீட்டின் முன்புறத் தோட்டத்தில் உள்ள மகிழ மரத்தடியைச் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுத்துச் சிலையைப் ப்ரதிஷ்டை செய்யத் தீர்மானித்தார்கள். அன்று தீபாவளி நன்ள்ை. ஒரு சிறு சிமெண்ட் மேடை கட்ட ஒரு கொத்தன் கூட அகப்பட வில்லை. நன்று எனத் தோன்றியதை அன்றே செய்யவேண்டு மாதலின், அன்பரும் அவரது புதல்வியும் தாமே கடைக்கால் தோண்டி ஜல்லிக் கற்களைப் பரப்பி, பீடம் கட்டத் துவக்கினர்கள். அவ்வமயம் ஒரு மார்வாடி நண்பர் வந்து, கொத்து வேலையையும் மனமுவந்து செய்யும் தனவந்தர்களைக் கண்டு அதிசயித்து, உடனே சென்று ஒரு மார்வாடிக் கொத்தனைத் தமது காரில் அழைத்து வந்து இமைப்பொழுதில் பீடம் அமைத்துக் கொடுத்தார். ஆளுல் பிரதிஷ்டை செய்யவேண்டிய நேரம் நெருங்கி விட்டதால் பூசு வேலை செய்ய அவகாசம் இல்லை. விக்ரகத்தை முறைப்படி நிறுவி ஆராதிக்க வேண்டுமென்ற கருத்தைத் தோற்றுவித்த பெரியார், தாமே நேரிற் சென்று திரு வல்லிக்கேணியில் வசித்துவந்த மகால கூடிமி உபாஸ்கர், ரீ P. A. சுப்ரமண்ய அய்யரை, விக்ரகப் பிரதிஷ்டைக்காக அழைத்துவங் தார். அவரும் விக்ரகத்தின் அழகிலும், தெய்விகப் பொலிவிலும் ஈடுபட்டு, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தூப, தீப, நைவேத் யாதிகள் செய்து தீபாராதனையை முடித்துப் பிரதிஷ்டையைப் பூர்த்தி செய்தார். அன்று மகாலசுடிமி அஷ்டோத்ரம் அருச்சனை மட்டும் செய்யப்பட்டது. இவ்வாறு பார்த்திப u ஐப்பசி மீ க்ருஷ்ண சதுர்த்தசி கூடிய சுபதினத்தில் தீபாவளி யன்று (அக்டோபர் 1945) மாலை தேவி விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டது.