பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii அவருக்கு விக்கிரகங்களை விற்பனை செய்தவர், பார்த்திய u ஐப்பசி மாதம் (அக்டோபர் 1945) தீபாவளிக்கு மூன்று தினங்கள் முன்னர், ஓர் இரவு 10 மணிக்கு ஒரு மோட்டார் காரில் அவர் இல்லத்திற்கு வந்து எழுப்பினர். விழித்து எழுந்து அவரைச் சந்தித்தவுடன், அவ்வியாபாரி, ' நான் உங்களுக்கு ஓர் அழகிய கற்சிலையைக் கொண்டு வந்திருக்கிறேன் ; அதைத் தங்களுக்கு இலவசமாகக் கொடுக்க விரும்புகிறேன் ' என்று சொன்னர். சிலை வைக்கோல்சுற்றி மூடப்பட்டிருந்தது. அன்பரும் வியாபாரியும் அச்சிலையை வண்டியிலிருந்து இறக்கி வீட்டின் முன்புறத் தோட்டத்தில் வைத்தனர். வியாபாரி உடனே விடைபெற்றுக் சென்று விட்டார். இறக்கியவுடன் அன்பர் அச்சிலையைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏனென் ருல், அந்த விற்பனையாளர் அதிக விலை வைத்தே வ்யாபாரம் செய்பவர் ; சொன்ன விலைக்குக் குறைத்துக் கொடுப்பவரல்லர். சிலேயை இலவசமாகக் கொடுத்ததால், அது அவ்வளவு கன்ருகவும் உயர்ந்ததாகவும் இராது என அன்பர் கருதினர். என்ன சி' என்பதையும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை கட்டுகளைப் பிரித்துப் பார்த்ததில், அச்சிலை அழகியதும், வெகுபுராதனமானதுமான ஒரு தேவி விக்ரஹமாக இருக்கக்கண்டு ஆச்சர்யமடைந்தார். அச்சமயத்தில் அவருடன் சிறந்த தெய்வபக்தராக விளங்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் அருகில் இருந்தார். நிரம்பச் செல்வமும், பரந்த தொழிலும், சிறந்த செல்வாக்குமுடைய அப்பெருந்தகை, தமது தொழில் பொருள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தெய்வ வழிபாட் டைச் சிக்கெனப்பிடித்துத் துறவிபோல் வாழ்ந்து வந்தார். அவர் பூரீ அரவிந்தமகரிஷியிடமும் ரீ ரமண பகவானிடமும் மிக்க அன்பு பூண்டு தம் வாழ்நாளைத் தெய்வத் தொண்டுக்கே அர்ப்பணம் செய்தவர். அப்பெரியாரையும் அன்பரையும் உளங் குளிரச் செய்தது அச்சிaல. அதன் வசீகரத் தோற்றமும், தெய்விக அழகும், எழிலார்ந்த அமைப்பும் எல்லையற்ற வியப்பை ஊட்டின. உடனே அப்பெரியார் ஏனைய விக்ரஹங்களைப்போல் தனி அறையில் வைத்து அழகு பார்க்கக்கூடிய விக்ரஹம் அல்ல