76
இலக்கிய அமுதம்
ஏறக்குறைய இரண்டு நூற்ருண்டுகள் நிலையுற்று இருந்தது. இவனது ஆட்சிச் செல்வாக்கு வடக்கே துங்கபத்தின்ர்வரை பரவி இருந்தது. இவன் சிறந்த கடற்படையைக் கொண்டு இலங்கையையும் மாலத் தீவுகளையும் அடிப்படுத்தின்ை. இவனது தரைப் படை தென்னிந்தியாவில் இணையற்றது. கீழைச் சாளுக்கியருடன் மணவுறவு கொண்டு. மேலைச் சாளுக்கியரின் வலிமையை ஒடுக்கிய பெருவீரன் இராசராசன். இவனது ஆட்சியில் ஒவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும் நன்கு வளர்க்கப்பட்டன. இவன் காலத்திற்ருன் சைவத் திருமுறைகள். நாடெங்கும் பரவின : சைவ சமய வெள்ளம் நாடெங்கும் பரந்து, மக்கள் உள்ளத் தைக் கொள்ளை கொண்டது. சோழப் பேரரசை உண்டாக்கப் பெரும்படை திரட்டியவன் இராச ராசனே ஆவன்; அப்படை இவன் நினைத்தன யாவும் தடையின்றிச் செய்து வந்தது பாராட்டற் பாலது. அரசியல் அமைப்பைத் திறம் பெற அமைத் தவனும் இராசராசனே ஆவன். நாகரிகம் மிகுந்த இக்கால அரசியல் அமைப்பிற்கும் இராசராசன் அர சியல் அமைப்பிற்கும் எள்ளளவும் வேறுபாடுஇல்லை. இராசராசனுக்கு முன்பு இராட்டிரகூடர் படையெடுப் பால் துன்புற்ற சோழநாடு, இராசராசன் காலத்தில் கிருஷ்ணையாறுவரை பரவியது-மேற்கே அரபிக்கடல் வரை பரவியது-தெற்கே இலங்கை வரை பரவியது எனின், இராசராசன் போர்த்திறனை என்னெனப்
புகழ்வது !
மெய்க் கீர்த்தி
இச் சோழர்க்கு முற்பட்ட பல்லவர், பாண்டியர் பட்டயங்களும் கல்வெட்டுக்களும் பல கிடைத் துள்ளன. அவற்றில் அரசமரபு கூறப்பட்டிருக்கும். அந்தந்த அரசன் சிறப்புச் சிறிதளவே கூறப்பட்டி ருக்கும் ; முற்றும் கூறப்பட்டிராது ; விளக்கமாகவும் குறிக்கப்பட்டிராது. இம்முறையை விசயாலயன் வழி