பக்கம்:வாழும் வழி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வாழும் வழி


கிழிய இடமில்லை. அது பருந்தின் சிதறிய சிறகுபோல் பார்வைக்குத் தெரிந்தது. வயிறு இருக்கும் இடமே தெரியவில்லை; முதுகோடு ஓடி ஒட்டிக்கொண்டிருந்தது. ஏழ்மையின் எல்லையைக் கண்டவர் அவர். தற்போது பசியெனும் தீராப் பகைவனால் பெரிதும் தாக்கப்பட்டிருந்தார். அவர் யார்? 'குசேலரோ என எண்ணிவிட வேண்டாம். ‘வன்பரணர்’ என்னும் பெயர் பூண்ட புலவர் பெருமான் அவரே. அவரைச் சுற்றிலும் அவர் தம் மனைவி மக்கள் சூழ்ந்திருந்தனர். வேற்றூர்க்குச் செல்லும் அக்குடும்பம் இளைப்பாறுவதற்காக வழியில் உள்ள அக்காட்டில் தங்க வேண்டி வந்தது.

அங்கே ஒரு வில்வீரன் வந்தான். ஏன், ஒரு சிற்றரசன் என்றே செப்பலாம். வேட்டைக்கு வேண்டிய ஒப்பனை செய்துகொண்டிருந்தான் அவன். அவனைக் கண்ட புலவர் வணங்கி எழுந்தார். எழுந்ததற்கு காரணம் அச்சமன்று; பெருமதிப்பே. ஆனால், புலவரை எழுந்து நிற்க வைத்தானா அரசன்? இல்லையில்லை. தலையசைத்து, இன்சொல் புகன்று, கையால் அமர்த்தி உடனே அமரச் செய்துவிட்டான். புலவரின் ஏழ்மை நிலைமையையும், பசியால் வாடிய தோற்றத்தையும் கண்டான். அக்காட்சியை அவனால் பொறுக்க முடியவில்லை.

புலவரின் பசிப் பிணியினைப் போக்கும் மருந்து அரசனிடம் கையிருப்பு இல்லை. காரணம் என்ன தற்போது அவன் இருப்பது அரண்மனையன்று; நடுகாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/38&oldid=1104803" இலிருந்து மீள்விக்கப்பட்டது