பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

' கடல்சூழ்ந்த உலகுபுகழ் காவியம் செய்யாமல்

கண்மூடும் கம்பருக்கோர் கணக்கில்லை அம்மா ! இடமகன்ற போர்முனைதான்் ஈதென்னக் கானது இறக்கின்ற வில்விசயர் எத்தனைபேர் அம்மா !”

தக்க திறன் இருந்தும்-நல்ல தருணம் வாய்த்திலதேல் மிக்க புகழ்ள ய்தி-மக்கள் மேன்மை அடையாரம்மா !'

இவை க்ரே (Gray) என்ற ஆங்கிலப் புலவர் ஆக்கிய கையறு நிலைச் செய்யுட்களைத் தமிழாக்கிய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் செய்யுட்கள்.

பழந்தமிழ் இலக்கியங்கள், தமிழகத்தின் இயற்கை இன்பங்களைத் தாம் கூறும் அகப் பொருள், புறப்பொருட் சிறப்புக்களைக் கூறுவதற்கு இடையிடையே எடுத்துக் காட்டிச் சென்றன. பின்னர் வந்த புராண இலக்கியங்கள், நாட்டுச் சிறப்பு என்ற தனித் தலைப்பிட்டு, அவ்வியற் கையின் இறும்பூதுகளே இனிது எடுத்துக் காட்டிப் பாராட்டி மகிழ்ந்தன. அவ்விலக்கியங்களில் இயற்கையின் எழிலோ வியங்களைக் கண்டு மகிழ்ந்த தற்காலத் தமிழ்ப் புலவர்கள், ஆங்கிலத்தில், கடல், காடு, மலர், மாலை, அருவி, ஆறு, மயில், மான் என்பன குறித்துச் சிறு சிறு பாடல்கள் புனைந்து பாராட்டி மகிழ்வதையும் கண்டனர். அதனல், தாம் கண்ட தமிழ் நாட்டு இயற்கைக் காட்சிகள்ே, அவ் வாங்கிலப் புலவர்களின் வழியிற் சென்று, சிறு சிறு செய்யுட்களால் பாடி மகிழ்ந்து, தமிழிலக்கியச் செல்