________________
பகுதி) . . தமிழ்ப் புலவர் சரித்திரம் இயல்பறிந்தும் வகுப்பின் தரம் அறிந்தும் குறித்தகால வளவறிந்தும் வினாப்பத் திரிகை கொடுக்கும் பரீட்சாதிகாரியை யிழந்த தமிழ் மாணாக்கரின் துரதிர்ஷ - டத்தை யென்னென்பேம் ! இத்துணை நலம் வாய்ந்த இவர் நம் சென்னைச் - சர்வகலாசாலை யலயுவிகளுள் ஒருவராகவும் மிருந்தனர். நூலாசிரியத் தன்மை , , , பிள்ளையவர்கள் பதிப்பித்த நூல்கள் போகத் தாமே புனைந்தியற்றியன. கட்டளைக் கலித்துறை யென்னுமோர் இலக்கண நூலும், வசன சூளாமணி : யென்னுமோர் உரைநடை நூலும், சைவமகத்துவ போதம் என்னுமொரு சைவசமய நூலும், ஆறாம் வாசக புத்தகம், ஏழாம் வாசக புத்தகம் என்னும் கல்வி யறிவிற்றேரும் இளஞ்சிறார்க்கென வகுத்த வசன நூல்களும் பிறவுமாம். இவரது உரைநடை செந்தமிழ்த் திரிசொற்கள் மலிந்து சொல்லதிக்கும் பத சாலங்களும் இயைந்து கட்டுரைச் சுவைநயங்காட்டி இயல்வது, இவ்வியல்பு பற்றி யன்றே இவர்தம் வசவ சூளாமணி பிரதமகலா பரீட்சைப் பாடமா யேற்பட்ட தூஉ மென்க. ஒழுக்கம் இவரால் ஆதரிக்கப்பட்டோரும் இவர்க்கு நண்பராய் நண்ணினோரும் பலதிறத்தினர். தென்னாடெங்கும் இவரை யறியாதார் எவருமில்லை. இவர் உண்மைதோன்ற வாதஞ் செய்வுழித் தமது நண்பர்களுக்காகச் சார்ந்து பேசி யும் பிறருக்காக விலகிப் பேசியும் ஒழுகுறு மியல்புடைய சில போலி மாக்கள் போலாது எப்பொழுதும் நடுவு நிலைமை குன்றாதவாறு நடந்து வந்த நற்றமி ஓளர். தவறுநர் நண்பரேயாயினும் நொதுமலரே யாயினும் அவரை நல்லறி ஆட்டித் தெருட்டுலார் இவர். நம் பிள்ளையவர்களும் திலான் பஹ தார் வி, கிருஷ்ணமா சாரியரவர்களும் நண்பர்களே யாயினும் மாறுபட்ட இடங் கள் பலவுள. இன்னும் இவர் தற்காலத்துப் பிறர் வன்மை கண்டு அழுக்கா றடையும் புன்மக்கள் போலாது பிறரது பேராற்றல் கண்டுழி யெல்லாம் அன் னாரை வியந்தும் ஆதரித்தும் பரிசிலளித்தும் போற்றியும் கொண்டாடியும் ஒழுகி வந்தவர். அந்தோ! இத்தகைய அன்புடைப யண்ணலை இழந்த தமிழ் வாணர் பெரிதும் கறவையிற் பிரிந்த கன்றெனக் கையற்று அயர்வார்கள் என்பதொருதலை. பட்டப் பேறு நமது சென்னைத் துரைத்தனத்தார் எப்பொழுதும் யோக்கியதை கண்டு யெல்லாம் கவனித்துத் தக்க பட்டமளித்து வருபவராதலின் நமது தாமோ தரம் பிள்ளையவர்கட்கும் ராவ்பகதூர் என்ற பட்டத்தினை 1895-ஆம் வருடத் தில் அளித்தார்கள்; அஃதன்றியும் தமக்குத் தமிழ் மொழியின் கண் ஐயப்பாடு நேர்ந்துழி யெல்லாம் அவரிடங் கேட்டும் தெளிந்தனர். இவ்வாறு இவர்