உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சோழர் வரலாறு"

முன்னுரை

இந்தியாவின் தென்கோடிப் பகுதி பண்டைக் காத்தில் தமிழகம் எனப் பெயர்பெற்றது. தமிழ: கத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று நாடுகள் வரலாற்றுக்கு முற்பட்ட தாலத்தி லிருந்தே ஏற்பட்டிருந்தன். இன்றைய திருவாங் கூர்-கொச்சி நாடுகளும் மலையாள மாவட்டமும், சேரநாடு எனப்பெயர் பெற்றது. தஞ்சை, திருச்சி' மாவட்டங்களைக் கொண்ட நிலப்பகுதி சோழநாடு எனப்பெயர் தாங்கியது. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள் சேர்ந்த நிலப்பகுதி: பாண்டியநாடு என வழங்கியது. சேலம், கோயம்புத் தூர், நீலகிரி மாவட்டங்கள் கொங்குநாடு எனப் பெயர் பெற்றது. திருக்கோவலூரும் அதனைச் சேர்ந்த நடுநாட்டுப் பகுதியும் மலையமான் நாடு என வும், அதற்கு வடபால் அமைந்த பெருநிலப் பகுதி (நெல்லூர் வரையில்) தொண்டைநாடு எனவும். பெயர் பெற்றிருந்தன.

தமிழகம் இங்ங்னம் பல பிரிவுகளாகப் பிரிந்: திருந்த போதிலும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தான் முடிமன்னர் மூவர் இருந்து வந்தனர். பிற நாடுகளில் சிற்றரசர்களே இருந்து ஆட்சி புரிந் தனர். சிற்றரசர் ஆட்சி புரிந்த நாடுகள் சில காலங் களில் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன; கொங்குநாடு சிலகாலங்களில் சேரர் கைப்பட்டிருந் தது; சில காலங்களில் சோழர் கைப்பட்டிருந்தது. அவ்வாறே மலேயமான் நாடும் தொண்டைநாடும் சில

  • இது மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலரில் வெளி:

வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/73&oldid=640755" இலிருந்து மீள்விக்கப்பட்டது