13. நாடகத் தமிழ்
சங்க காலத்தில் -
கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. இயற்றமிழைப் புலவரும், இசைத் தமி ழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே நாட கத்தையும் நடனத்தையு. கூத்தர் என்பவர் பேணி வளர்த்தனர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப் :பட்டனர்; உள்ளக் குறிப்புப் புறத்தில் தோன்றும் படி திறம்பட நடிப்பவள் விறலி எனப்பட்டாள். கூத்தி, ஆடுமகள், ஆடுகள மகள் என நடனமாடிய மகள் சங்க் காலத்தில் பல பெயர்களைப் பெற்றிருந் தாள். நடனமாடிய மகன் கூத்தன், ஆடுமகன், ஆடுகள மகன் என்று பெயர் பெற்ருன். இவர்களே கதை தழுவி வரும் கூத்துக்களை ஆடினர். அங்ங்னம் ஆடிய பொழுது ஆண்மகன் பொருநன்’ என்றும் பெயர் பெற்ருன். -
தமிழ் தொன்று தொட்டு இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளைப் ப்ெற்றிருந்தது. கூத்த நூல், செயிற்றியம், பரதம், முறுவல், அகத்தியம், சயந்தம், குணநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் என்பன சங்க கால நாடக நூல்கள் என்று உரை களால் அறிகின்ருேம். இவையெல்லாம் அழிந்து விட்டன. சிலப்பதிகாரம் ஒன்றே இன்று நாட்கக் காப்பியமாக இருந்து வருகின்றது.
சிலப்பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட் டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது. அக்காலத் தில் நாடகம் என்ற சொல் கூத்து என்ற சொல் போலவே நடனத்தையும், கதை தழுவி வரும் கூத் தையும் குறித்தது. ' நாடகக் காப்பிய நன்னூல்