உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் வரலாறு

77


வந்தவரும் பின்பற்றி வந்தனர். ஆனல், இராச ராசன் இந்த முறையை அடியோடு மாற்றிவிட்டான்; தனது ஆட்சி யாண்டுகளில் முறையே நடைபெற்ற போர்ச் செயல்களை முறையே வெளிவந்த கல் வெட் டுக்களில் முறைப்படி குறித்துவரலாளுன் சான்ருக ஒன்று கூறுவோம் : இராசராசன் முதலில் காந்த ளுர்ச் சாலையில் கலம் அறுத்தான். இந்த வெற்றியே இவன் கல் வெட்டுக்களில் முதல் இடம் பெற்றது. இப்படியே ஒன்றன்பின் ஒன்ருக முறைப்படி குறிக் கப்பட்டன. இங்ங்ணம் இப்பெரியோன் ஒழுங்கு பெறக் குறித்தவையே பிற்கால அரசராலும் பின் பற்றப்பட்டன. அக்குறிப்புக்களே இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன. பட்டயம் அல்லது கல் வெட்டுக்குத் தொடக்கமாக ஒரு தொ Լ-ճծիII, அழகாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். இஃது இவனது பட்டயம் அல்லது கல் வெட்டு என்று எளிதில் கூறிவிடத் தக்கவாறு அத் தொடக்கம் இருக்கிறது. அது 'திருமகள் போல . ...” என்பதாகும். இவனது வீர மகளுன இராசேந்திரன் கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடை யவை. இங்ங்னமே பின் வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுக்களும் வேறு வேறு தொடக்கம் கொண் டவை. இத்தகைய ஒழுங்கு முறையை அமைத்த இப்பேரரசன் அறிவாற்றல்களை என்னெனப் பாராட் டுவது ! -

போர்ச் செயல்கள்

இப்பிற்காலச் சோழர்கள் வடமேற்கே மேலைச் சாளுக்கியருடன் ஓயாது பல போர்கள் செய்து வெற்றி கண்டனர்; பாண்டியர்களுடனும் இலங்கை அரசர்களுடனும் பல போர்கள் செய்து தங்கள் பேரரசைக் காத்து வந்தனர். முதல் இராசராசன் மகனுன முதலாம் இராசேந்திரன் தன்கடற்படையை ஏவிக் கிழக்கிந்தியத் தீவுகளிலும், மலேயா, இந்தோ சீனம் முதலிய இடங்களிலும் சோழர் செல்வாக்கை