9. இசையும் பண்ணும்
15
லாமே யன்றி, ஒதினால் மாத்திரம் அவரை உணர்ந்துரைக்க லாகாது.
2. பண் [312]:- இளி, தாரம், துத்தம், பாலை, மருள், வாய்மூரி, காங்தாரம், காமரம், பஞ்சுரம், செந்து, செவ்வழி, நேரிசை என்னும் பண்வகைகள் கூறப்பட்டுள.
3. இசைக் கருவிகள் [19 (5)]:- யாழ், வீண, குழல், மொந்தை, முழவு இவை கீதம் பொலிதலுக்கு முக்கியமானவை என ஏற்படுகின்றது.
4. தொண்டர் கூட்டமும் இசையும் [19 (8)]:- இசைபாடும் அடியார்கள் கூட்டம் கூட்டமாய்க் கூடித் துதிப்பர்; பாடுவர்; ஆடுவர். கிருவிழாக் காலங்களிலே வந்து கூடிப் பண்ணிசை பாடுவர்.
5. மறையும் (வேதமும்) இசையும் [360]:- ‘உள்ளங் கலந்து இசையால் எழுந்த வேதம்’, ‘வேதத்தின் இசைபாடி’, ‘பண்ணமரும் நான்மறை’, ‘மறைகொள் கீதம்’, என வருதலால் மறை(வேதம்) இசையுடன் பாடப் பெறும் எனத் தெரிகின்றது.
6. குயிலும் இசையும் [19 (2]:- குளிர்ந்த இன்னிசைப் பாடல்களைக் குயில் பாடும்.
7. மாதர்களும் இசையும் [372 (3), 373 (2)]:— திருவையாற்றில் மடந்தையர் பண் காங்தாரத்திற் பாடல்கள் பாடினதும், திருவாரூரில் மாதர்கள் பாடுங் கீத ஒசை தேவலோகத்தை ஊடறுத்ததும், கிருக்களரில் மங்கையர் பண் பொலிய யாழ் வாசித்ததும், திருவா மாத்துாரில் மங்கைமார் நடமாடி யின்னிசை பாடினதும், திருமாணிகுழியில் மடங்தையர்கள் தத்தம் மாளிகையில் ஊசலில் வீற்றிருந்து இனிதாக இசை பாடினதும், காவிரிப்பூம்பட்டினத்தில் மாதரும் மைந்தரும் பாரெலாம் மகிழ இசைபாடினதும், கோட்டாற்றில் மாதரார் இசை பாடினதும், வேதாரணியத்தில் மாதர்களின் இசை பாடல் ஒலித்ததும், சீகாழியில் மாதர்கள் இசைபாடி ஊசலை ஆவிட்டதும் சொல்லப்பட்டுள.