பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தேவார ஒளிநெறிக் கட்டுரை

8. வண்டும் இசையும் [391-397]:- கோடல், முல்லை, மாதவி, தாமரை முதலிய மலர் மேலிருந்து வண்டு இசை முரலும், இசை பயிலும். மலர்களை மோந்து வண்டு பாடும். தேன் தோயும் பொழில்களில் வண்டினங்கள் இசை முரலும். வண்டுகள் தென்னென இசை செயும், மும்மென்று ஒலிக்கும், தெத்தே என முரலும், பொழில் நிழலில் தேனும் வண்டும் இன்னிசை பாடும். குரவம், கோங்கம், பிண்டி , ஞாழல், புன்னை யாகிய மரங்களில் இருந்து வண்டுகள் நாடோறும் தேன் உண்ட களிப்பாற் கிாமமாகப் பண் செய்யும். தாமரை, நெய்தல், செங்கழுநீர், குவளை ஆகிய மலர்களிற் கிடைக்கும் மதுவை உண்டு வண்டுகள் பல பண்களிற் பாடும். காமரம், செந்து, செவ்வழி, துத்தம், நேரிசை, பஞ்சுரம், மருள் ஆதிய பண்களை வண்டுகள் பாடும்.கேரிய ை, பன், ம், மருள் ஆகிய பண் அஃ வண்டுகள் ம்ெ. வண்டுகள் பாடக் குவளை, சண்பகம், கொன்றை யாதிய போதுகள் மலர்ந்து தாதவிழும்; வண்டுகள் ஏறக் கள் அவிழும்.

9. குழலும், யாழும், பறையும் வண்டு வாசிப்பது [395-397]:- குரவமேறி வண்டினங்கள் குழல் போலவும் யாழ்போலவும் பாடும். பல வண்டுகள் கூடி ஒலிக்கும் ஒலி பறையும் அதிர் குழலும் போன்றிருக்கும். நீல வண்டுகள் குழல்போலப் பண் செய்யும். வண்டினங்கள் நீலோற்பலத்தின் மதுவுண்டு நேரிசைப் பாணில் யாழ் வாசிப்பது போல ஒலிக்கும். பஞ்சுரப் பண்பாடி யாழொலியை எழுப்பும்; குருந்தம், கொன்றை, வேங்கை ஆகிய மரங்களில் இருந்து வண்டு யாழ் செய்யும். யாழையும் சீ என்னும்படியாக ஏழிசைகளையும் வண்டுகள் முரலும்.

மாலையில் வண்டினங்கள் மதுவுண்டு இசை முரலும். அது பாலை யாழ்ப்பாட்டை ஒக்கும். அதைக் கேட்டு ஈசன் மகிழ்வான்.

10. வண்டுங் குயிலும் [462 (9-xiii)]:- குயில் பாடக் கேட்ட பெடை வண்டு தானும் முரலும்; வண்டு பாடக் கேட்ட குயில் தானும் இசை பயிலும்; பொழில்களில் வண்டு இன்னிசை பாடக் குயிலும் உடன் பாடும்.