பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. இலக்கணப் பகுதி

17

11. வண்டும் மந்தியும் [463 (11-iii):- வண்டினங்கள் கீதம் பாடினால் மந்திகள் அது கேட்டுக் குதித்து விளையாடும்.

12. வண்டும் மயிலும் [462 (22-xii)]:- சோலைகளில் மதுவுண்ட வண்டு இழிவிலாத வகையில் பண்பாடுதலைக் கேட்டுப் பொழில் நீழலில் மயில் நடனம் செய்யும்; ஒலிக்கும்.

10. இந்திரன் [20]

இவன் அமரர்களுக்கு இறைவன்.கற்பகப் பூமாலை யணிந்தவன். முநிவரால் சாபம் அடைந்தவன். கண்ணார் கோயில் என்னுந் தலத்தில் ஈசனை விண்ணவர்கள் வழிபட்டேத்த அந்தச் சாபம் நீங்கப் பெற்று இவன் ஆயிரம் கண்கள் பெற்றனன். சீகாழியில் வழிபட்டு இன்பம் உற்றனன். இவன் நகரம் அழகிய நகரம். திருவெண்காடு முதலிய வேறு தலங்களிலும் வழிபட்டுள்ளான்.

11. இலக்கணப் பகுதி [25]

இலக்கணச் சூத்திரங்களுக்கு உதாரணமாக எடுத்துக் காட்டக்கூடிய பல அருமைப் பிரயோகங்கள் உள்ளன. இசைத் தமிழுக்கு வேண்டிப் பதங்கள் புணர்ச்சியின்றி நிற்பன, மரூஉ மொழி, முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை, குறுக்கல், நீட்டல், சிங்க நோக்கு, அன்மொழித் தொகை, ஆகுபெயர், வேற்றுமை உருபு மயக்கம், அசைச்சொற்கள், சாரியைச் சொற்கள், திணை பால் வழுவமைதி, பூட்டுவிற் பொருள்கோள், ஒருமை பன்மை விகுதிகள் விரவி வருவன, துணைச் சொற்கள் முதலிய பல பிரயோகங்கள் எடுத்தாளக் கூடியன கிடைக்கின்றன.

1. அணி யிலக்கணம் [25 (2)]: உயர்வு நவிற்சி:-

(i) கச்சிமாநகரில் மாடங்கள் மலையை நிகர்க்கும்; மாடத்தின் மீதுள்ள கொடிகள் மேகங்களை அளாவும். 2