பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தேவார ஒளிநெறிக் கட்டுரை

(ij) (திருவிழிமிழலையில்) பண் நிரம்பிய மடவார் பாலகரைப் பாராட்டும் ஒசை கேட்டு விண்ணவர்கள் வியப்புடன் விமானத்தில் இறங்கிவந்து கேட்பார்கள்.

2. எடுத்துக்காட்டுவமை:- மேழி பிடித்து உழுவது போலப் பன்றிகள் புழுதியைக் கிளைக்கும்.

3. தற்குறிப்பேற்ற அணி:- (i) இறைவனை இறைஞ்ச வாரீர் என விண்ணோர்களை அழைப்பதுபோலக் கொடிகள் ஒங்கி அசைந்தன.

(ii) தாமரைத் தடாக நீர்மணித் தலத்திற் சங்கு வர்க்கஞ் சூழவுள்ள செந்தாமரைத் தீயிற் பொரியிடுவது போலப் புன்குமரம் மலர்களைச் சொரிய, அவைகளின் தோற்றம் திருமணச் சாலையை ஒக்கும்.

12. இலங்கை [26]

இலங்கை தென் திசையில் உள்ளது. இலங்கைக்குக் கடலே வேலியா யமைந்து விளங்கிற்று. இலங்கை நகர் மணம் வீசும் பொழில் சூழ்ந்தது; நீண்ட கொடி மதிலாற் சூழப்பெற்றது. பெருமை வாய்ந்தது. நீடு கொடி யமைந்த மாடங்களும், இடி தாங்கிகளும், மாட வீதிகளும் பொலிவுற்ற பழைய நகரம் இலங்கை. அந்நகர் அதன் எல்லைக்குட் சூரியன் இயங்காவண்ணம் ராவணனால் ஆளப்பட்டது.

13. உபதேசம் [30]

1. நெஞ்சுக்கு உபதேசம் [30 (3)]:-

நெஞ்சமே! அஞ்சுதல் வேண்டாம்.

ஆரூர், கொச்சை (சீகாழி), திருப்பருப்பதம், திருக்கோவல் வீரட்டம் முதலிய தலங்களைத் தொழுது உய்யலாம். ஈசன் திருநாமத்தைச் சிந்தை செய்; இறைவன் திருவடியையே தியானித்துக் கொண்டு இரு; நமது துயர் கெடும்; வினையெலாம் ஒழியும்.

2. தொண்டர்களுக்கு உபதேசம் [80(2)]:ー。 அடியீராயினீர்!திருச்சோற்றுத் துறையைச் சிந்தை