பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. உபதேசம்

19

செய்ம்மின்! திருவையாற்று ஈசர்க்கு ஆளாமின்! கள்ளம் ஒழிமின்!உள்ளத்து இச்சையுடன் இறைவனை உகந்து தொழுமின்! ஈசனைப் புது மலரிட்டுத் தொழுது உய்ம்மின்.

3. உலகுக்கு உபதேசங்சள் [30]:-

(1) இரப்பது புன்மை.

(2) இழிவுக் கிடமாய வாழ்க்கை ஒழியவேண்டித் தவஞ்செயக் கருதில் பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் தொழுமின்கள்; சிவபுரத்தில் வழிபடுமின்கள்.

(3) இறைவன் திருவடியைத் தொழும் அறிவன்றி வேறு அறிவு வேண்டாம்.

(4) ஈசனுக்கு ஆட்செய அல்லல் அறும்.

(5) ‘மங்கை பாகா! மான்மறி யேந்திய கையா ! எங்கள் ஈசா!’ என்று சொல்லி எழுபவர்களுடைய இடர் வினைகளை இறைவர் ஒழிப்பார்.

(6) காலையில் ஈசனை ஏத்திப் பணிமின்.

(7) சிற்றம்பலத்தை நித்தல் ஏத்துபவரது தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணம்.

(8) திருவெண்காட்டான் என்று ஈசனை ஓதினவர் தீதிலராவர்.

(9) துறவியானால் தான்துன்பம் நீங்கும் என நினைத்து அஞ்சுதல் வேண்டாம்; திருவாரூர் தொழுதால் நமது அல்லல் நீங்கி நாம் உய்யலாம்.

(10) மலர் தூவி ஈசனை வழிபட்டால் கூற்றுவன் நம்மிடம் வர அஞ்சுவான்.

4. அறியவேண்டிய உண்மைகள் [30]:-

(1) அடியார் அவலம் அறியார்.

(2) அளவிலா வழிகளில் அடியார்களுக்கு இறைவர் அருள்புரிவார்.

(3) ஆக்கம் உறினும் ஏக்கம் வரினும் இறைவன் திறத்தையே நாம் பாராட்டுதல் வேண்டும்.

(4) இரப்பவர்க்கு எந்நாளும் பெரியோர் காலம் பகரார்.