பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தேவார ஒளிநெறிக் கட்டுரை

(5) இறைவர் இன்னரெனச் சுட்டிக் காட்ட அரியவர்; ஏத்தித் துதித்தால் சற்று எளியராவார்.

(6) இறைவனைப் போற்றுதல் கற்றறிவோர்கள் தம் கடன்.

(7) ஈசன் பெருமையை உணராத திருவிலிகளைத் தெருட்டுதல் ஆகாது.

(8) ஈசா என்றால் இடரில்லை.

(9) எங்கே பிறந்தாலும் யாதாகிப் பிறந்தாலும் அடியார்க்கு அருள்புரிய இறைவன் தயாராக இருக்கின்றான்.

(10) ஒதுவதால் மாத்திரம் அறிவு கைகூடாது.

(11) சாநாளும் வாழ்நாளும் யாராலும் அறிய முடியாது.

(12) பெரியோர் அறிவு தம்மை ஆண்ட கழலைத் தொழல் அல்லது பிறிதொன்றும் அறியாது.

(13) தமது செவித் தொளைகளால் இறைவன் பெருமையன்றி வேறு விஷயங்களை அடியார் கேட்க விரும்பார்.

(14) நாள் கோள் கலியாமை வேண்டின், ஈசனது தாள்களை வணங்குவீராக.

(15) பிறைகுடி தன் திருநாமங்களையும் வாச ஸ்தானங்களின் பேர்களையும் கூறிப் பிதற்றுவீராக.

(16) புன்பேச்சுக் கேளாதீர்கள்.

(17) பேசிப் பேசிப் பொழுதைப் போக்க வேண்டாம்.

(18) மலர்கொண்டு இறைவனைப் பூசித்தல் மனத் தின் சேட்டையைப் பாழ்ப்படுத்தும்.

(19) மார்க்கண்டேயர் பொருட்டுக் காலன் உயிரிழந்தபின் ஆலமுண்ட பெருமானது அடியார்களிடம் யமதுாதர் நெருங்கி யடர அஞ்சுவர்.

(20) யார் இறைவனைச் சதா சிந்தனை செய்கின்றார்களோ அவர்களது மார்பினின்றும் ஸ்ரீ லக்ஷ்மி பிரிந்து நில்லாள்.