உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தேவார ஒளிநெறிக் கட்டுரை

நாமகளின் மூக்கை நம்பர் (தக்க யாகத்தில்) அரிவித்தார் சம்பந்தப் பெருமானது பாடல் பத்தும் மனமகிழ்வொடு பயில்பவர் கலைமகளது அருள்பெற்றுப் புகழொடு உலகினில் அமர்வர்.

24. கற்றோர் - புலவர் - நிலை

தலைப்பு 91-பார்க்க.

25. காமன்

தலைப்பு 56 (2) பார்க்க.

26. காலம், பொழுது, நாள் [60, 62]

திதிகளில் அட்டமியும், நக்ஷத்திரங்களில் திருவாதிரை, உத்திரம், திருவோணம், கார்த்திகை, பூசம் என்பனவும், பயணத்துக்காகாத நக்ஷத்திரங்கள் (நாள்கள்) இவை யென்பனவும், கிரகங்கள் ஒன்பதும், பஞ்சசகாலம் வரும் வகையும் கூறப்பட்டுள.

27. காளி-நீலி [63]

காளி:- தேவ லோகத்தைத் துன்புறுத்திய தாருகனைக் கொல்வதற்காக இறைவனால் விரைவிற் சிருஷ்டிக்கப்பட்டவள் காளி. காளி சண்டத் தீப்போலக் கோபித்துத் தாருகனைத் தொடர்ந்து அவனை வெட்டிப் பலியிட்டாள். காளியின் பெருங் கோபத்தை அடக்கவேண்டிச் சிவபிரான் நடனமாடினர். காளிக்குக் கோபம் அடங்கவும் குணம் பெருகவும் செய்து சிவபிரான் உலகத் துயரை ஒழித்தார். அம்பர்மாகாளம் என்னும் தலத்திற் காளி சிவபிரானைப் பூசித்தனள்.

நீலி:- மகிடனைச் (மகிடாசுரனைச்) சங்கரித்து இறைவன் அடியிணையைப் பூசித்தாள்.

28. கொடை, கொடையாளிகள், ஈதற் சிறப்பு [65]

இரப்போர்க்குக் கரப்பு இலாமலும் - பின்னர் வா - ஏன் அகால வேளையில் வந்தாய் எனக் கூறிக் காலம் பகராமலும்,