௨
திருச்சிற்றம்பலம்
தேவார ஒளிநெறிக் கட்டுரை
1. கணபதி [1]
உமையம்மையார் பெண் யானையின் உருவத்தைக் கொள்ளத் தாம் ஆண் யானையின் உருவத்தை எடுத்துத் துக்கமும் நோயும் இவ்வுலகைப் பீடியாதிருக்கும் பொருட்டுச் சிவபிரான் கணபதியைத் தோற்றுவித்தருளினர். யானையின் புகர்முகமும், தந்தமும், மதமும் உடையவர் கணபதி. ஒற்றைக்கொம்பர், முக்கண்ணர், தடக்கையர், தனது அடியை வழிபடும் அடியாரதுஇடர்களைக் களைபவர்.
2. அகப்பொருள் [8]
சுவாமிகள் அருளிய பதிகங்களுள் பதின்மூன்று பதிகங்கள் தெளிவாக அகப்பொருள் இலக்கணத்தன. இவை தம்முள் இரண்டு பதிகங்கள் பறவைவிடு தூது. அன்றில், அன்னம், கபோதகம் (புறா), கிளி, குயில், குருகு, தாரா, நாரை, பறவைகள் (பொதுவாக), பூவை, வண்டு, வாரணம் இவை தூதுப் பறவைகளாக விளிக்கப்பட்டுள; தலைவனிடத்தில் எனது நிலைமையை, எனது அல்லலை எடுத்து விளம்பு என்பதும், தலைவன் திருநாமத்தை எனக்கு ஒருமுறை கூறுக என்பதும், தலைவனை என்னிடத்தே வரும்படி கூவு என்பதும் தூது செல்லும் பறவையிடத்திற் சொல்லப்படும் விஷயங்களாம். தலைவன் கவர்ந்ததாகச் சொல்லப்படுவன :-கலை, துயில், நலம், வளை, உள்ளம், எழில், நாண், சாயல், கோல நீர்மை; தலைவனை உள்கி உருகுவதாற் சோர்வன:-குழல், மேகலை, வளை. சோர்வுறும் பெண்ணின் கூற்றுக்களாவன:——