உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் காட்டும் முருகன் 1.1 1.

கலி வெண்பாவில் இருபத்தொரு கண்ணிக ளில் இவர் வடித்துள்ளார். (37–57)

இளம்பருதி நூறா யிரங்கோடி போல வளந்தருதெய் வீக வடிவும்

என்று அக் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பினைப்

|கழ்கி ன்றார்.

முருகன் சூரனை அழித்த செய்தியினைக் கூறி மறை முடிவாம் சைவக் கொழுந்தே! தவக் கடலே! வானுதவும் தெய்வக் களிற்றை மணஞ் செய்தோனே’ என்று புகழ்ந்து துதிக்கின்றார். இத்தகு சீர்மிகுந்த முருகவேளிடம் குமர குருபரர் இரந்து வேண்டுவன. இவையாகும்:

பல்கோடி சன்மப் பகையு மவமிருந்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும்-பல்கோடி பாதகமுஞ் செய்வினையும் பாம்பும் பசாசுமடற் பூதமுந்தீ நீரும் பொருபடையும்-தீதகலா வெவ்விடமுங் துட்ட மிருகமுத லாமெவையும் எவ்விடம்வங் தெம்மை யெதிர்ந்தாலும்-அவ் விடத்தின் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும் அச்ச மகற்று மயில்வேலும்-கச்சைத் திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையு மீரா றருள்விழியு மாமுகங்களாறும்-விரி கிரணம் சிந்தப் புனைந்த திருமுடிக ளோராறும் எருதத் திசையு மெதிர்தோன்ற-வந்திடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுங் தந்து புகுங் துல்லாசமாக வுளத்திருந்து.................. கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண் டடியேற்கும் முன்னின் றருள்.

-கந்தர் கலிவெண்பா : 1.11.122

குமரகுருபரர் முருகன் மீது இயற்றிய மற்றொரு பந்த நூல் முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகும்.