உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巧8” முருகன் காட்சி

கொடிய வலியோடும் விளங்கும் பாம்புகள் மாளும்படி அடிக்கும் பல வரிகளையும் வளைந்த சிறகுகளையும். உடைய கருடனைத் தம் நெடிய கொடியாகக் கொண்ட திருமால், முருகக் கடவுளைக் காண வருகின்றார்.

புள்ளனி நீள்கொடிப் புணர்கிலை தோன்றும்

-சிலப்பதிகாரம்: 11: 136

என்ற சிலப்பதிகார அடியும்,

மண்ணுறு திருமணி புரையும் மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்

-புறநானூறு: 59: 5.6

என்ற புறப்பாடல் அடிகளும் இங்கே ஒப்பு நோக்கி

மகிழ்தற்குரியன.

வெள்ளிய ஆனேற்றை வெற்றிக் கொடியாக உயர்த் தியவனும் பலராலும் புகழப்படும் திண்தோளினையுடைய, வனும், உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டு விளங்கும் திருமேனியினையுடையவனும், இமைத்தலில் லாத முக்கண்களையுடையவனும், முப்புரங்களை எரித்த வனும், மாறுபாடு மிக்கவனும் ஆகிய சிவன் ஆங்கே எழுந்தருளுகின்றான்.

அடுத்து, ஆயிரங் கண்களையும், நூறு வேள்விகளை இயற்றிப் பெற்ற பெரிய வெற்றியினையும், நான்கு ஏந்திய கொம்புகளையும் நெடிய கையினையும் உடைய புகழ் பெற்ற யானையின் பிடரியிலே ஏறிய செல்வ வளம் மிக்க இந்திரனும் ஆகிய பிரமன் ஒழிந்த பிற கடவுளர் எல்லாம் தத்தம் தொழிலைப் பண்டுபோற் செய்து தலைவராகக் கருதியும், திருமாலின் திருவுந்திக் கமலத்தில் பிறந்த வனும் அளவில்லாத ஊழியை உடையவனும் நான்கு திருமுகங்களை உடையவனும் ஆகிய அயனாம் பிரமனை விடுவிக்கக் கருதியும் திருவாவினன்குடிக்கு மு. ரு க ப் பெருமானைத் தரிசிக்க எழுந்தருளுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/60&oldid=585945" இலிருந்து மீள்விக்கப்பட்டது