ாக்கீரர் காட்டும் முருகன் 59.
நான்முகனாம் பிரமனை முருகப் பெருமான் சிறை யிட்ட செய்தியினைக் கந்தர் கலிவெண்பா பின்வருமாறு வலும்:
- * * * * * * * * * * * * * * * * * * * * படைப் போன்
அகந்தை புரைப்பமறை யாதி யெழுத்தென்று
உகந்த பிரணவத்தி னுண்மை-புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வ தெங்ங னென்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே.
-கந்தர் கலி வெண்பா: 90.92
ஆதவனைப் போலத் தோன்றுகின்ற வெறுப்பற்ற அறிவினை யுடையவராம் நான்கு வேறுபட்ட இயல்பினை யுடைய பன்னிரு ஆதத்தியரும், பதினொரு உருத்திரரும், அட்டவசுக்களும் அயசூரி (மருத்துவர்) களாகிய இருவரும் ஆகிய முப்பத்து மூவருடனே பதினெட்டு வகையினாலும் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களும ஆகிய பதினெண் கணங்களும், விண்மீன் போல பொலிவு பெற்றாலொத்த தோற்றத்தினையுடையவராய், காற்றுப் போனறு விரைந்த செலவனையுடையராய், காற்றடைத் தித்தோன்றினாற் போன்ற வலியினையுடையராய், இடி இடித்தாற்போன்ற குரலினையுடையராய், தம் இடும்பையாகிய குறையை முருகப் பெருமான்பாற் கூறிக் குறையிரந்து தத்தம் கலைமையினைப் பெறும் முறைமையினை முற்ற முடித்துக் கோடற்கு வானத்தின் வழியே வந்து முருகப் பெருமானைக் கான ஒருங்கே நிற்கின்றனர்.
குற்றமற்ற கொள்கையினையுடைய அறக்கற்பினை யுடைய தெய்வயானையாருடனே சிலநாள் திருவாவினன் குடி என்னும் ஊரிலே எழுந்தருளியிருத்தலும் உரியன் முருகன் என்று கூறி முடிக்கின்றார் நக்கீரர்:
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன். --
--திருமுருகு: 175, 176