உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவமயம்.
தமிழ்மொழியின் வரலாறு


1. ஆதி வரலாறு.

மிழ்மொழியின் வரலாற்றைக் குறித்து யாம் ஏதேனுஞ்சொல்லப் புகுமுன்னர், அஃது ஆதிகாலத்தில் வழங்கிக் கொண்டிருந்த நாட்டின் இயல்பி னைப்பற்றிக் கூறுதல் இன்றியமையாத தாகின்றது. ஆகவே பண்டைக்காலத்து இந்தியாவின் நிலைமையைப்பற்றிச் சிறிது கூறுவோம்.

பல்லாயிரவாண்டுகட்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நில மாயிருந்தது. அக்காடுகளில் தீயவிலங்குகள் திரித்து கொண்டிருந்தன. ஆசிரியர் நச்சினார்க்கினியரும் அகத்தியனார் தெற்கே வந்த காலத்துக் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்க ணிருந்தனரெனத் ‘தொல்காப்பியச் சிறப்புப்பாயிரவுரை’ யிற் கூறாநின்றனர். மரங்களினடியிற் புற்றுக்களிற் பெரும்பாம்புகள் மண்டலமிட்டுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் நகராதல், ஊராதல், வழி யாதல், வீடாதல் காண்டலரிது. இங்குமங்குங் காட்டுமனிதர் சிலர் - கரடிகளெனக் குகைகளில் வசித்தனர். வேறு சிலர் குரங்குகளென மரங்களிற் படுத்துத் தூங்கினர். அவர்கள் குறுகிக் கறுத்த விகாரவுருவினர், ஆடையற்றவர், அழுக்கேறிய வுடலினர். அவர்கள் 'காய்கனிவேர் கிழங்குகளையும் மான் பன்றி முதலிய மிருகங்களின் இறைச்சிகளையும் தின்று பிழைத்து வந்தனர். அன்னார் காலத்தில் வாள் முதலிய கருவிகளில்லை. ஆயினும் கூரிய சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு அறுத்தல் வெட்டுதல் முதலிய தொழில்கள் செய்தனர். ஆதலின் அவர்கள் ‘கற்கால மனிதர்’ என்னப்படுவர். அவர்களுக்குக் கற்களைத் தேய்த்துத் தீயுண்டாக்கவும் தெரியும்.

இவ்வாறு வெகுகாலம் வாழ்ந்துவந்த பின்னர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிறிது நாகரிகமடைந்து சீராய்ப் பிழைக்கக் கற்றுக்கொண்டனர். காடுகளில் தாங்கள் உறைவதற்குச் சிறு குடிசைகளை அமைத்துக் கொண்டனர். இலைகளையும் விலங்குகளின் தோலையும் ஆடையென வுடுத்தனர். அவர்கள் வழங்கிய படைகள் வில்லும் அம்பும் கூரிய முனையுள்ள ஈட்டிகளுமாம். தம் முன்னோரினும் உயரிய உணவு உண்டு வந்ததனால் அவர் கள் மிகப் பருத்தவர்களாயும் மிக்க பலமுள்ளவர்களாய் இருந்தனர். மண்ணெடுத்துச் சட்டிகள் செய்யவும் அவற்றில் உணவாக்கவும் அவர்கட்குத்