பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

தெரியும். அதன்மேல் இரும்பு முதலிய உலோகங்களில் வேலை செய்யக் கற்றுக் கொண்டனர். அவற்றாற் கோடரி சட்டி முனை முதலியன செய்துகொண்டனர். இக்காலத்து மனிதர்களை ‘உலோககால மனிதர்’ என்பர் பௌமிய நூலோர்.

கொஞ்சக்காலஞ் சென்ற பின்னர் வடக்கே இமயமலைக் கப்பாலிருந்து சில சாதியார் இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் வந்து சம பூமிகளிற் கண்ட இக்காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப்பக்கங்களில் ஓடி அங்கே அநேககாலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் ‘நாகர்கள்’ என்னப்படுவோர். இவர்களில் சிலர் நீலகிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர்.

இனி மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் தமிழாராவார். இவர் கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள். அங்கே பொறுக்க முடியாக் குளிரினாலும், மழையின்மையாலும், நிலம் கற்றரையா யிருந்ததனாலும், ஆறுகளும் அதிகமில்லாமையாலும், தானியம் முதலியன விளையாமையாலும் இவர்கள் சீவனஞ் செய்வதற்கே மிகவும் கஷ்டப்படுவார்கள்; தாங்கள் ஆடுமாடுகளுக்காகப் புல்லைத் தேடிக்கொண்டு ஊரூராய்த் திரிவார்கள். இத்தகையோர் இமயமலைக்குத் தெற்கே வெப்பமும் வெயிலு முடையனவாய்ப் பெரிதுஞ் செழிப்பாக வளர்ந்த புல்வெளிகள் நூற்றுக் காவதத்திற்கு மேற் பரந்திருந்தலையும், அவ்வெளிகள் வழியாய்ப் பெரிய ஆறுகள் ஓடுதலையும், அங்கே பலவகைத் தானியங்களும் நன்றாய் விளைதலையும் கண்டாற் கைப்பற்றிக் கொள்ளாது எளிதின் விடுவார்களோ?

ஆதலால் அவர்கள் இந்தியாவில் புகுந்து முன்னிருந்தாரைத் துரத்தி விட்டு மேற்கூறிய புல்வெளிகளையே தமது சொந்த தேசமாக்கிக்கொண்டனர். இவர்கள் வடமேற்குக் கணவாய்களின் வழியாகவந்து சிந்துநதிச் சமவெளியிற் தங்கியிருந்து இடம் போதாமையார் பிறகு கங்கைநதிச் சமவெளியிலும் குடியேறினார்கள். தமிழர்கள் எத்துணைக்காலம் இங்கே தங்கியிருந்தனரென்பது தெரியவில்லை.

அதன்மேற் சிலகாலஞ் சென்றபின்னர், வடகிழக்குக் கணவாய்களின் வழியாகத் ‘துரானியர்’ என்னும் வேறொரு முரட்டுச் சரதியார் இந்தியாவுட் புகுந்து தமிழர்களை வென்று துரத்திவிட்டனர். அவர்கள் மங்கோலியர் இனத்தைச் சேர்ந்தவர்; ‘மஞ்சணிற மாக்கள்’ என்ற பெயரும் அவர்கட்குண்டு. அங்ஙனந் துரத்தப்படவே, தமிழர்கள் விந்தியமலையின் கிழக்கு முனையைச் சுற்றியும், கடற்கரையோரமாகவுள்ள நெருக்கமான சமவெளியினூடும் மேலும் மேலுஞ் சென்றனர். சிலர் தம்மை வென்ற துரானியரோடு கூடிக் கொண்டு முன்னிருந்த இடத்திலேயே தங்கியிருந்தனர். சிலர் கிழக்கு மலைத் தொடர்ச்சியின் கணவாய்களின் வழியாகப் போய்த் தக்ஷிண பீடபூமியில் வந்து தங்கினர். இறுதியாக அநேக ஆண்டுகள் திரித்து பலர் தென்னிந்தியா