பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவேந்தரின் தனித்தன்மை

மக்கள் வாய்மொழி இலக்கியத்தின் தமிழ் இலக்கியம் தாலாட்டு. நாட்டுப்புறப் பாடல்கள் பல்வகை இசையிலும் பாங்குறப் பயின்றாலும் உலகில் உள்ள பாடல்களில் எல்லாம் தாலாட்டேமிகவும் பெருமிதமானதாகும். காரணம் ஆண் பெண் அன்புறவில் தாய்மைக் குருதியின் உயிர்ச் சிற்பமன்றோ அது. வருகால உலகத்தை வாழ்விக்க வந்த மக்கட்பேற்றினைப் போன்ற ஒன்றினைச்சீராட்டிப் பாராட்டி செம்மையாக வளர்ப்பது தானே முறை.

உயிரினத்திற்கு இயற்கை அளித்துள்ள கொடைகள் ஏராளம். அவற்றுள் மனித இனம் போன்று சிறந்ததொன்றில்லை. அதில் குழந்தை என்பது ஓர் எதிர் காலத்தின் மகிழ்ச்சிப் பெருக்காகும். இன்றைய குழந்தை நாளைய மாந்தன்'.

குழந்தைப் பருவமே புத்துணர்வும் புத்தெழுச்சியும் செவி வாயாகக் கொள்ளும் உணர்ச்சிப் பருவமாகும். அந்தச் சின்னஞ்சிறு பருவத்தின் எழிலையும் ஏற்றத்தையும் குடும்பப் பெருமையும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்னிசையின் வடிவில் பென்னம் பெரியாதாயுள்ளங்களை தந்தன. ஆனால் சமய வாணர்களோ எவ்வளவுதான் கற்பனைத் திறத்தினைக் காட்டினாலும் பிள்ளைத் தமிழிலும், தனித் தாலாட்டுகளிலும் வாழ்வறத்துக்குப் பொருந்த வியப்பு நிலைக்கதைப் புனைவுகளாகவே அமைந்துவிட்டனர்.

குழந்தைகளின் செவியில் நல்ல இசை என்பது எப்போதும் முன்னேற்றக் கருத்துகள், மனித நேயக்