பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருத்துகள் கொண்டு மானுடமேன்மைக்குரிய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புகுத்தவேண்டும் என்ற எண்ணம் பாவேந்தருக் கெழுந்தது. எனவே அவரின் தாலாட்டுப்பாடல்கள் தனித்தன்மை பெற்றுத் தலைசிறந்து பெற்றோர்கள் வாயிலும் கற்றோர்கள் வாயிலும் முற்றுகை இட்டன.

ஒவ்வொரு மாந்தனும் தன்மான உணர்வும் தன்ழுெச்சி கொண்டு விளங்கினால் ‘அனைவரும் உறவினர்’ என்போம் ‘வையம் வாழ வாழ்’வோம். அதற்குரியதனைத்தும் குழந்தையின் செவிநுகர் கனிகள்தாம் ஊட்டம் தரும்.

தாலாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், பண்பும் பயனும் காட்டும் அறிஞர் மு. அருணாசலம் அவர்தம் கட்டுரையும் பேரா. தமிழண்ணல் ஆய்வுரையும் இணைத்துள்ளேன். பழமைப்பண்ணையில் புதுமையைவிதைத்த பாவேந்தரை அறிய அவை உதவும். நூலை வெளியிடும் கவிஞர் கழகத்திற்குமிக்க நன்றி.

த. கோவேந்தன்