பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாலாட்டு ஓர் ஆய்வு

தாய்மை, உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் “தாலாட்டு” என்பது. இது உலகிற்குப் பொதுவான கலை; தமிழகத்திற்குத் தனிச் சிறப்புத் தரும் கலை; இந்த நாட்டில் ஒரு தாய் தான் பெற்ற மகளை வளர்த்து, வாழ்வுக்குகந்த கணவனுடன் மணம் செய்து வைத்து வழியனுப்புங்கால் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரிகத்தை எடுத்துக்காட்டும் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரித்தை எடுத்துக்காட்டும் பொருள்கள் பல; பிறப்போடு ஒட்டிய அகப்பண்பாட்டை எடுத்துணர்த்தும் உள்ளத்துச் செல்வங்களும் பல. கலையருவியின் தாயூற்றாக விளங்கும் இத் தாலாட்டு, அவ்வுள்ளத்துச் செல்வங்களிலே உயர்ந்த ஒன்று.

நாட்டுப் பாடல் இலக்கியம்

'தாலாட்டு' என்றவுடன் அதை அலட்சியப்படுத்தி ஏதோ எல்லாத் தெரிந்தது போல் அறியாமை இருள் வயப்படுவோரும் உண்டு. குழந்தையை அழாமல் அடக்கி உறங்க வைக்கும் வாழ்க்கைத் தேவைக்காகவே தான் தாலாட்டுகிறாள்; 'கலை கலைக்காவே' என்று கனவு காண்பவர்கள் வாழ்க்கையிலே பிறந்து, வாழ்க்கையிலே வளர்ந்து அதற்கே பயன்படுகின்ற இத்தகைய கலைகளைக் காணார் போலும்! வாழ்க்கை இலக்கியங்களாகக் கருதத்தக்க நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் முதலியன 'எழுதாக் கிளவி'களாக விளங்கி இலக்கியத்திற்கும் மொழி ஆராய்ச்சித் துறைக்கும் எவ்வளவு பயன்பட்டுவருகின்றன என்பதைத் திறனாய்வாளர் தெரிந்து கொள்ளுதல்