பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 375 பலமானது மேலும் மேலும் குறைவுபட்டு ஒடுங்கக் (கருவிகள்) பகைவருடைய ஆயுதங்கள் (அல்லது கூட்டங்கள்) மேலும் மேலும் அழிபட்டு ஒழிய (பிற நரி, நரி பிற நரியும் (பிறவும்) கழுகு முதலிய பிறிவும் (தொடரத் தொடர) மேலும் மேலும் (பிணங்களைத் தின்ன) நெருங்கிவர, கூட்டமாய்க்கூடும் (கூகை) கேட்டான்கள், (பெடையொடு) பெண் கோட்டான்களுடன் (குழறக் குழற) மேலும் மேலும் கூவச் (சுரபதி) தேவர் தலைவனாம் இந்திரன் மேலும் மேலும் போற்றித் துதிக்கப் (ப்ரபை அயில்) ஒளி வீசும் வேல்ாயுதத்தைத் (தொடு) செலுத்தின நல்ல குமரப் பெருமாளே! (கடியொரு செயலுற்று. திரிவேனோ) 1157-1 கோழையாய் (பயந்தவராய்) இருப்பவர் (ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர்) ஆங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்; (அற்பர்) கீழ் மக்களாயும் (கோது சேர்) குற்றம் உள்ள இழிகுலத்தவராயும் இருப்பவர் தங்கள் குலத்தின் மேன்மையைப் பேசிச் சபை நடுவே வீற்றிருப்பார்; தருமமாகச் சோறே (பசித்தவருக்கு) இடாத பேர்வழி தரும புத்ர :: என்று தம்மைப் புகழ்ந்து பேசுவார்; ( டியூடே) த்திர நிலையிலே ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரனாம். நான் எனத்திெேப் புகழ்வர் குற்றம் நிறைந்த கலியுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. வறுமைசேர் எளியவர்கள் வயிரமது பூண்கினும் வளையற்கல் என உரைப்பார் சிலம் புறத்தினும் அகத்தின் அக் கிரமமும் செயும் ஈன ரைப்புகழுவார் சித்த சுத் தியதாகி ஞானநெறி தேர்ந்திடும் திவ்யபெரி யோரை இகழ்வார் காலகலி யுகதருமம் ஈதென உரைத்திடுவர் கற்பக விராச மேவு கங்கைபுனை ஈசனே மங்கை மகிழ் நேசனே கயிலையங் கிரிவாசனே." (கயிலாசநாதர் சதகம் 28) - எனவரும் பாடலையும் காண்க கலியின் கொடுமையை அருணகிரியார் அஞ்சுவதை 'பொய்க்கலி போமாறு". எனவரும் திருப்புகழ்ப் பாடலிற் காண்க (950).