பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற்றன்மையே தொல்காப்பியனார் கூறிய பாடாண் திணை என்றால் பொருத்தமுடையதாகும்.

பாடாண் திணையின் எண்வகைகளிலும் முதற்கண் அமைந்த எழுவகையினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

       “அமரர்கண் முடியும் அறுவக
        புரைதீர்காமம் புல்லிய வகையினும்
        ஒன்றன்பகுதி ஒன்றும் என்ப”    (தொல்-புறத் 21)

என வரும் தொல்காப்பியச் சூத்திரமாகும். “அமரர்கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல். பரவல் என்பவற்றினும், குற்றந்திர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும் அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணையாதற்குப் பொருந்தும்” என இச்சூத்திரத்திற்கு உரை வரைந்தார் இளம்பூரணர்.

“கொடிநிலை முதலிய ஆறும், கடவுட் புகழ்சியன்றிப் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதியிற்பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல் என்ற இவ்விருவகையானும் ஒருவனைப் புகழ்தலாற் பாடாண்பாட்டாயிற்று” என்பது இளம்பூரணர்தரும் விளக்கம்.

"வெட்சி, பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் ஏழுடன், பாடாண்திணைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவும் தொகுத்து ஒன்றாகக் கூட்டிப் பாடாண்பகுதி எட்டு எனக் கொண்ட நச்சினார்க்கினியர், அவ்வெட்டினுள் பாடாண் திணைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவுங் கூடிய ஒன்றினைத் தேவர்பகுதி எனவும் மக்கட்பகுதி எனவும் இரண்டாகப் பகுத்து அவ்விரண்டினுள் தேவர்க்கு உரித்தாகும் பகுதியெல்லாம் தொகுத்துக் கூறுவது இச்சூத்திரம் எனக்கருத்துரை வரைந்தார். “பிறப்புவகையானன் றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறைவாழ்த்தின் கண்ணும், அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டும் குறிப்புப் பொருந்தின பகுதிக் கண்ணும், மேற்பாடாண்பகுதி எனப்பகுத்து வாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களும் எனப்பகுத்த

18

18