உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 41

நீளமாகப் பச்சைக்கோடு, துலங்குகிறது. இடது புறங் கையில் கோலமும், இன்னும் ஏதோ பச்சைக் குத்தும் தெரிகின்றன. மினுமினுக்கும் ஆரஞ்சு வண்ணச் சேலையும் வெண்மையான ரவிக்கையும் அணிந்திருக்கும் அவள் பொன்னாச்சியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருக் கிறாள் என்று தோன்றுகிறது.

குண்டு முகத்தில் கண்களால் அவளைப் வியப்புடன் பொன்னாச்சியும் பார்க்கிறாள். முதல் நாளிரவே பாவாடை, ரோஸ் சேலை, ஜாக்கெட் செட்டைப் பத்திரமாக அவிழ்த்து வைத்து விட்டுப் பழைய சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். அந்த ஒரு செட் ஆடைகளே அவளுக்குப் புதுமையாக, முழுதாக இருக் கின்றன. அவளுக்கு மூன்றாண்டுகளுக்கு முன் மங்கல நீராட்டுக்கென்று மாமன் வாங்கித் தந்த சேலை அது. திருச்செந்துார்க் கடையில் எழுபது ரூபாய்க்கு வாங்கி வந்தார். -

பிறகு, ஒரே ஒரு பழைய பாவாடையும் பாடியும் தான் உள்ளாடைகள் சாதாரண நாட்களில் அவள் முழுச் சேலையை முரட்டுச் சேலையைத்தான் பின் கொகவம் வைத்து உடுத்துவது வழக்கம். மூக்குத் துளைகளில் ஈர்க்கு களும், காதுத்துளைகளில் சன்னமாகச் சீவிய நெட்டியும் தான் அணிகள், அவளுக்குக் கைகளில் முழியே கிடையாது. போட்டிருக்கும் பிளாஸ்டிக் வளையல்கள் இரண்டும் மொழு மொழுத்த கைகளில் பதிந்து இருக்கின்றன.

“சின்னாச்சி அளத்துக்குப் போயிட்டாளா?’ என்று விசாரிக்கிறாள். +

“ஆமா...”

“தண்ணிகிண்ணி வச்சாளா? சோறாக்கினாளg ராவுல வறவக் காணமின்னு சொக்குவும் அவளும் சண்ட போட்டாவளே?”

பொன்னாச்சிக்குத் திகில் பிடித்துக் கொள்கிறது.

&—&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/44&oldid=657539" இலிருந்து மீள்விக்கப்பட்டது