உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடற் புலவர்கள் காட்டும் முருகன் 85

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

-சிலப்பதிகாரம் : இந்திர விழவூரெடுத்த காதை : 170 ார் செவ்வேள் திருக்கோயிலினைச் சிறப்பித்துப் பேசு

கின்றது. - -

அடுத்து விறல்வேள் என்ற சொல்லாட்சி

மலர்ந்த வள்ளியங் கான கிழவோன்

ஆண்ட கை விறல்வேள் -

-ஐங்குறு நூறு : 250 : 3-4

றும்,

சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடிஞ்சின விறல்வேள் களிறுார்ந் தாங்கு

o -பதிற்றுப்பத்து; 2 ஆம் பத்து: 5-6.

என்றும் வரும் பகுதியான் தெரிய வருகின்றது.

வெண்சுடர் வெல் வேள்

என்று பரிபாடல் (18 : 26) கூறும். திருமுருகாற்றுப் படை முருகப் பெருமானை, -

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்

-திருமுருகு: 273

என்று குறிக்கும். செய்யோன் என்ற சொல்லாட்சி,

மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணி முக வூர்தி யொண்செய் யோனும்

-புறநானுாறு : 56: 7.8

என்று புறநானுாற்றில் இடம் பெற்றுள்ளது. மேலும் சேயோன் மேய மைவரை யுலகமும் என்றே தொல் காப்பியனாரும் முருகனைச் சேயோன் என்று சுட்டியுள்ளார். இவ் அடியினுக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் செங் கெழ் முருகன் காதலித்த வான் தங்கிய மைவரை யுலகமும் என்றே உரை கண்டார். இதனாற் குறிஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/87&oldid=585975" இலிருந்து மீள்விக்கப்பட்டது