20 முருகன் காட்சி
பதிைய திருவிளையாடலில் ஒரு செய்யுள் கானப்படு கின்றது, அது வருமாறு:
அங்கங் குலுங்க வரிவாளி னெய்யென்றோர் பங்கக் கவிதை பரமன் சொல விளிந்து சங்கறுப்ப தெங்கள் குலங் தம்பிராற் கேதென்றோர் துங்க முறுங்கவிதை சொன்னா னெதிர் துணிந்து. கொங்கு தேர் வாழ்க்கை என்னும் செய்யுட் பொருள் பற்றி மதுரைச் சொக்கநாதருக்கும் நக்கீரனாருக்கும் வாது நிகழ்ந்தது. அது போழ்து,
அங்கங் குலுங்க வரிவாளி னெய்தடவிப் பக்கம் படவிரண்டு கால்பரப்பிச்-சங்கதனைக் கீர்கீ ரெனவறுக்குங் கீரனோ வென்கவியை ஆராயு முள்னத் தவன். என்று சொக்கநாதர் சினந்து கூற அதற்கு எதிராக நக்கீரனாரும்,
சங்கறுப்ப தெங்கள் குலங் தம்பிராற் கேதுகுலம் பங்கமறச் சொன்னார் பழுதாமே-சங்கை அரிந்துண்டு வாழ்து மரனாரைப் போல இரந்துண்டு வாழ்வ திலை. என ஆலவாயுறை அண்ணலை அவமதித்துரைத்தன ரென்றும் வழங்கும் ஒர் கதைக்கு மேற்கூறிய பழைய திருவிளையாடற் செய்யுள் ஒன்றே சான்று கூறுகின்றது. இக் கதை கட்கெல்லாம் சான்றுகள் இல்லை. இக் கதை யினைச் சார்பாகக் கொண்டு புலவர் புராணமுடையார், நக்கீரனார் நெய்தல் நிலத்தில் பரதவர் குடி ஒன்றில் பிறந்தவர் எனக் கூறிப் போயினர். இக்கதையினையும்,
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்து என்னும் அகப்பாட்டு அடிகளையும், யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான்-இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்: என்னும் உரைக்குறிப்பினையும் ஆதாரமாகக் கொண்டு