28 முருகன் காட்சி
வலார் கழகத்தில் மொழித்துறையின் முட்டறுத்து விளங்கிய மூதறிபுலவர்கள் அனைவரும் பாடலைப் படித்து அதன் சொற்கவை, பொருட்சுவையில் ஊறித் திளைத்து * நல்ல நல்ல வென்று சாற்றினார்கள். எனவே பாண்டியன் பறை சாற்றிய பரிசிற்குத் தருமி உரியவனானான். அது போழ்து நக்கீரனார் குறுக்கிட்டு, குற்றம் இக் கவிக்கு உண் டென்று கூறினார். இது கேட்டுச் சிந்தை நொந்த தருமி, செய்யுள் கொண்டு இறைவன் திருமுன்னர்க் கொண்டு போய் வைத்து, நின்றன் கவிக்குற்றஞ் சில்வாழ் நாட் சிற்றறிவுடைப் புலவர் சொன்னா லாருனை மதிக்க வல்லார்’ என்று குறையிரந்து நின்றான்.
இதுகேட்ட, யார்க்கும் பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனுமான’ சிவபெருமான் புலவராய்த் தோற்றம் கொண்டார்.
கண்டிகை மதாணி யாழி
கதிர்முடி வயிரம் வேய்ந்த குண்டலங் குடிகொண் டாகத்
தழகெலாங் கொள்ளை கொள்ளத் தண்டமிழ் மூன்றும் வல்லோன்
றானெனக் குறி பிட் டாங்கே புண்டர நுதலிற் பூத்துப்
பொய்யிருள் கிழித்துத் தள்ள
-பரஞ்சோதி திருவிளையாடல் 52; 99
‘நூலாய்ந்தோர் வைகுந் திருந்தவைக் களத்தைச் சேர்ந்தார். அவை குறுகி யாரைநங் கவிக்குக் குற்ற மியம்பினார்’ என்றார். கீரன் அஞ்சாது நானே கிளத்தி னேன் என்றார். பொருட் குற்றம் அக்க விக்கு உண் டென்று நக்கீரனார் நவின்றார். கூந்தலுக்கு இயற்கை மனமில்லை என்று எடுத்துரைத்தார். இறைவனோ தேவ மகளிர் இந்திராணி முதலியோர் கூந்தலும் அத்தன்மைத்