பக்கம்:முருகன் காட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் வரலாறு 29

துத்தானோ என்று கேட்டார். அவை செயற்கை மண முடையனவே என்றார் கீரர். இறைவன் இறுதியில்,

பரவி நீ வழிபட் டேத்தும்

பரஞ்சுடர் திருக்கா ளத்தி அரவு நீர்ச் சடையார் பாகத்

தமர்ந்தஞா னப்பூங் கோதை இரவினிர்ங் குழலு மற்றோ

வெனவ.து மற்றே யென்னா வெருவிலான் சலமே முற்றச்

சாதித்தான் விளைவு நோக்கான். கற்றைவார் சடையா னெற்றிக்

கண்ணினைச் சிறிதே காட்டப் பற்றுவா னின்னு மஞ்சா

னும்பரார் பதிபோ லாகம் முற்று நீர் கண்ணா னாலு

மொழிந்த நும் பாடல் குற்றங் குற்றமே யென்றான் றன்பா

லாகிய குற்றங் தேரான். - -பரஞ்சோதி திருவிளையாடல்: 52; 105, 106

இவ்வாறு, தாம் வணங்கும் உமையம்மையின் கூந்த அம் செயற்கை மணந்தான் உடையது என்று வாதாடிய கிரனார், இறைவன் நெற்றிக் கண்ணைச் சிறிது காட்டிய நேரத்திலும் முற்றுநீர் கண்ணா னாலுமொழிந்த தும் பாடல் குற்றம் குற்றமே யென்றான். தன்பாலாகிய குற்றந் தேராத காரணத்தால், தேய்ந்த நாள் மதியானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப் போந்த செந்தியின் வெம்மைக்கு ஆற்றாது பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்தார் நக்கீரனார். பின்னர்த் தம் குற்றம் உணர்ந்த முக்கீரனார் இறைவன் இன்னருளை இறைஞ்சி வேண்டி இன்னுயிர் யாக்கை பெற்றார் என்று திருவிளையாடற் பாணம் கூறிச் செல்கிறது.

மு-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/31&oldid=585912" இலிருந்து மீள்விக்கப்பட்டது