உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

திருமுருகாற்றுப்படையின் இறுதிப் பகுதியில் பழமுதிர் சோல்ையில் பாங்குடன் ஞாலம் உய்யக் கொலுவீற்றி ருக்கும் ஞானச் செல்வனின் சிறப்பு நன்கு பேசப்படுகின்றது. ஊரூர் கொண்ட சீர் கெழு விழவும்’, ‘முருகாற்றுப்படுத்த உருகெழு வியன் நகரும் அப்பகுதியில் விளங்க எடுத் துரைக்கப்படுகின்றன. காடும்காவும் கவின்பெறு துருத்தியும் யாறும், குளனும் வேலுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப் பூங் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும் அன்றியும், நினைவார் நினையு மிடங்களிலும் கோலக் குமரன் கொலு வீற்றிருந்து, தன்னை நாடித் தேடிவரும் அடியார்களைத் தாங்கி, அஞ்சல் ஒம்புமதி: அறிவன் நின்வரவு’ என நல்ல ஆறுதல் அன்பு மொழிகளைக் கூறி அருள் பாலிக்கின்றான் என்பது நயமுறக் கிளத்தப்படுகின்றது. அடுத்து, அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருகனின் பெருமையும், அவன் அருள்கூர்ந்து அடியவர்களைப் புரக்கும் மாண்பும் மனங் கொளப் பேசப்படுகின்றன. இறுதியில் பழமுதிர் சோலையில் இழுமென இழிதரும் அருவி துகில்களைப் போல் அசைந்து, அகிலைச் சுமந்து, சந்தன மரத்தைத் தள்ளி அழகுற ஓடிவரும் அழகு கவினுறக் கிளத்தப்படுகின்றது. முடிவுரையில் திருமுருகாற்றுப்படையின் பெருமை பேசப் படுகின்றது. -

இவ்வாறு இந் நெடிய கட்டுரை திருமுருகாற்றுப் படையின் முழு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணலாம். நக்கீரர் வழியில் நின்று இக் கட்டுரையினை யான் உருவாக்கியுள்ளேன் என்பதனை இம் முன்னுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.

நான்காவது கட்டுரை பரிபாடற் புலவர்கள் காட்டும் முருகன்’ என்பதாகும். இருபத்திரண்டு பாடல்களைக் கொண்ட பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் எட்டாகும். இவ் எட்டுப் பாடல்களும் பழைய பாடல் களாகும். இப் பாடல்கள் வழி முருகனைப் பற்றிய செய்திகளாக நாம் அறிவன யாவை? என்னும் வினாவிற்கு விடைகூறும் வண்ணம் அமைந்துள்ளது இக்கட்டுரையாகும்.

=இளங்கோவடிகள் காட்டும் முருகன்’ என்னும் கட்டுரை, சமயக் காழ்ப்பின்றிச் சமய ஒருமைப்பாடு கண்ட நல்லார் இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/11&oldid=585851" இலிருந்து மீள்விக்கப்பட்டது