உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ரோஜா இதழ்கள்

கோன்னு சொல்லிட்டு போனா. நாங்கூட புதிசா ஹெல்த் சென்டர்ல ஒரு லேடி டாக்டர் வந்திருக்கா, உடம்பைக் காட்டிண்டு வாங்கோ மாமி, கண்ணும் முகமும் ரொம்ப பலகீனமாக் காட்டறதுன்னேன். அப்புறந்தான் மாமி எங்கிட்ட காதோடு சொன்னா, இத்தனை வயசுக்கப்புறம் மூணுமாசமாச்சுன்னு..... அதுக்கப்புறம் நான் தினம் வருவேன். ஏதோ வாய்க்கு வேணுங்கறதைப் பண்ணிக் கொடுப்போம், பாவம்னு. நேத்திக்கு எனக்கு வரமுடியலே. பொம்மிய அனுப்பிச்சு மாமி புடவையைத் தோச்சு உணர்த்திட்டு, காப்பிக் கொட்டை அரைச்சு, தோசைமாவுகரைச்சு வச்சிட்டு வாடின்னு. ‘அம்மா, பங்களாவாத்து மாமி மயக்கம் போட்டுக் கிடக்கான்னு’ ஓடி வந்து சொல்லித்து; அவர் இந்தண்டை அந்தண்டை நகர மாட்டார், பாரு. நேத்திக்கு என்னமோ தென்ன மரத்திலே பூச்சி இறங்கியிருக்குன்னு மருந்து வாங்கப் போனாராம். முனியம்மா கீத்துப்பின்னிண்டு உக்காந்திருந்திருக்கா. பேசிண்டே இருக்கறச்சே, அப்படியே சாஞ்சிட்டாளாம். அத்திம்பேருக்குச் சொல்லியனுப்பிச்சு வந்து, கார் வச்சிண்டு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கா. வீட்டை அப்படியப்படியே போட்டுட்டுப் போயிருக்காளேன்னு வந்தேன்....”

மைத்ரேயி கண்கள் அகல ஊமையாய் நிற்கிறாள்.

இதுதான் இறைவன் கருணையோ? மரத்திலிருந்து ஒடிந்து விழுந்த சிறுகிளை மரத்தில் மீண்டும் ஒட்டிக் கொள்ளுமோ அந்தக் கருணையில்?

“சுமதிக்கு, ரஞ்சிக்கெல்லாம் தந்தி கொடுத்திருக்காளா மாமி”

“நினைக்க எங்கே நாழி?...”

மதுரம் சரசரவென்று சருகுகளை சாக்கில் அள்ளிப் போட்டுத் திணிக்கிறாள்.

ஒரு நெடுமூச்சுடன் வாயிற்படிகளைக் கடக்கிறாள். ஏணிப்படிகள் போல் எட்டுப் படிகள். அவற்றுக்குமேல் உயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/62&oldid=1123719" இலிருந்து மீள்விக்கப்பட்டது