உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

59

உதறி விட்டு வாயிலைக் கடந்தாள். இப்போது அடிபட்டுச் சிறகொடிந்த பறவையாய்த் தரையில் விழுந்திருக்கிறாள். அவர்கள் கையிலெடுத்துப் புண்ணுக்கு இதமாக எண்ணெய் தடவுவார்களோ?

அறியாத குழந்தை தவறு செய்வது இயல்பு.

அம்மணியம்மா...அம்மணியம்மா அவளுக்கு யார்?

அவளை நினைக்குமுன் கண்களில் நீர்த்திரை படிகிறது.

அந்த, கசிவுடன் மனிதத்துவத்தில் நம்பிக்கை வைத்து அவள் வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறாள்.

சருகைக் குவித்து அள்ளிக் கொண்டிருக்கிறாள் மதுரம் மாமி. எதிர்பாராத ஆள்.

இந்தக் காலை நேரத்தில் எப்படி இங்கே வந்தாள் மதுரம் மாமி?

அவளருகில் மண்டி போட்டுக்கொண்டு சூணாவயிறு தரையில் இடிக்க, குடுக்கை முகம் முழுவதும் வேர்க்குரு அப்ப, அவளுடைய கைக்குழந்தை.

“மாமி?”

மதுரம் சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.

“அட...! மைத்தியா?.....”

மைத்ரேயி பரிதாபத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டு அவளைப்பார்க்கிறாள்.

மதுரம் ஓட்டைப்பானையின் தக்கை அடைப்பானை இழுத்து விட்டாற்போன்று பேசத் தொடங்குகிறாள்.

“நீ வந்துட்டியா? நல்லவேளை, போ! அக்காவுக்கு திடீர்னு நேத்து மயக்கம் போட்டு கட்டையோடு கட்டையாப் பேச்சு மூச்சில்ல. நீ போனதுக்கப்புறமே உடம்பும் மனசும் சரியாத்தானில்ல உங்கக்காவுக்கு. கலகலன்னே பேசறதில்ல. தூண் பக்கம் பின்புறம் உக்காந்திண்டிருப்ப, சுமதிகூட பெரிய லீவுன்னு குழந்தைகளை அழைச்சிண்டு வந்து பத்து நாள் இருந்துட்டுப் போனா. அக்கா சாப்பிடறது கூட குறைஞ்சு போச்சு. டாக்டர்ட்ட யானும் காட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/61&oldid=1123717" இலிருந்து மீள்விக்கப்பட்டது