பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

9


தாலாட்டு, உலகத்தில் “ராராட்டு” என மருவி வழங்குகிறது. இன்றும் மலையாளத்தார் 'தாராட்டு' என்றே வழங்குகின்றனர். இடைக்காலத் தமிழ் இலக்கியங்கில் 'தாராட்டு' எனும் வழக்கிருத்தல் கவனிக்கத்தக்கது. “தேரை தாராட்டும் பண்ணை” என்கிறார் கம்பர்.

"போற்றியுனைச் சேராரார் கண்டாசை தீராரார் கொன்னையள்ளித் தாராரார் என்று தாராட்டினாள்” என விறலிவிடு தூதிலும், 'ஊமன் தாராட்ட உறங்கிற்றே' என்று முத்தொள்ளாயிரத்திலும் வருகிறது. 'தன, தான' என்பது போல ‘ஆராரோ, ஆரிரரோ' என்பதும் சந்தமாகும். இதனை ராராரோ, ராரிரரோ என்றும், ஆரிவரோ என்றும் வழங்குவர். பழந்தமிழ்க் குடிகள் 'ரூரீரோ, 'ரூரீரோ' எனவும், நாஞ்சில் தமிழர் 'வாவாஓ' எனவும் இசை யமைத்தலைக் கேட்கிறோம். 'ஆராரோ ஆரிவரோ,' என்ற சந்த அமைப்பு-தாய் தன் குழந்தையைப் பார்த்து முற்பிறப்பில் நீயாரோ, நான் யாரோ, நாமிருவரும் ஆராரோ என்றிருந்தோம்; இப்பிறப்பில் தாயும் சேயும் ஆனோம் என மறைமுகமாக உட்பொருள் வைத்துப் பாடுவதாகச் சிலர் தத்துவ விளக்கம் செய்யுமளவு பெருமை பெற்று விட்டது! மலையாளத்திலும் தெலுங்கிலும் தாய்த் தமிழைப் போலவே முறையே 'ஆராரோ, ஆரிரரோ' என்பனவே இசையமைக்கும் சந்தங்களாக இருக்கின்றன. கன்னடத்தார் மட்டும் 'ஜோ, ஜோ' வென இசையமைப்பர்.

தாலாட்டு மலையாளத்தில் தாராட்டு ஆனதுபோல, தெலுங்கில் "ஊஞ்சேதி" ஆயிற்று. (ஊஞ்சு-ஊஞ்சல்) கன்னடத்தார் இதனை ‘ஜோகுள' என்பர். ஜோ என்பது சந்தம். பழந்தமிழ்க் குடிகள் தாலாட்டைக் “குலு