பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பொது திருப்புகழ் உரை 173 1074. (பெருக்கம்) நிரம்ப, நெஞ்சில் மகிழ்ச்சியுற்று, உருகும் அன்பு இல்லாதவன் நான், (ப்ரபுத் தனங்கள்) பெருந் தன்மைக் குணங்கள், (பண்பு) நற்குணங்கள் (எண்ணும்) அறிவு (அல்லது மதிப்பு) (நானும்) கூச்சம், அல்லது (எண்ணும் நானும்) மதிக்கத் தக்க கூச்சம் - ( பிழைக்க) நான் உய்யும் வகைக்கு இவை ஒன்றும் இல்லாதவன் நான், வில் ஏந்திய கையினராய் (மிண்டர்) வலிமை கொண்ட வராய வேடர்களின் (குன்று) மலையாம் வள்ளி மலையில் அமைத்த - தோன்றி வளர்ந்த (பெண்) வள்ளியின் (தனம் தனை) கொங்கையை (ஆர) உள்ளம் ஆர (உள்ளம்) நிறையக் குளிரத் திருக் கைகளைக்கொண்டு (அவளை) அணையச் சென்ற உனது (திறத்தை மேன்மைக் குணத்தை அன்புடனே (நான்) தெளிந்து உணராமல - கோபக் குணமே நிரம்பி, (மிண்டு உரைக்கும்) துடுக்குடனும் செருக்குடனும் பேசும் பேச்சுக்களைப் பேசும் (வம்பன்) பயனற்ற துஷ்டனாகிய நான், எனது (திருக்கும்) கோணலான புத்தி என்று (ஒழிந்திருப்பேனோ) என்று ஒழிந்து நற் புத்தியை அடைவேனோ! செருக்குடன் அன்று போப் அருட் கண்ணோக்கம் கொண்ட (அரன்) சிவபிரான் (தரித்த) வீற்றிருந்த குன்றம் (கயிலை) மலையை (நின்று) அடி வாரத்தில் நின்று அடியோடு (தனது) (தடக்கை கொண்டு வந்து) பெரிய கையதனால் எடுத்த வனாகிய இராவணனுடைய தலையைத் (தறித்த) வெட்டின (கண்டன்) வீரனாகிய திருமாலும், (எண் திசையோரும்) எட்டுத் திக்கில் உள்ளவர்களும், (சுருக்கம் இன்றி நின்ற அருக்கன்) சுருக்கம் இல்லாது விரிந்த கிரணங்களை கொண்டு நின்ற சூரியனும், இந்திரனும், துணையாய் உதவுகின்ற உனது திருவடிகளை விரும்பி நிற்பவர்களான நித்யசுகவாசிகளான - அன்பர்களும், மூன்று லோகத்தினர். களும் போற்றித் துதிக்கும் பெருமாளே தேவர்களின் பெருமாளே! ( திருக்கு என்றொழிந் திடுவேனோ)