பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. அறிமுகம்

ஞானியார் போற்றி:

"அந்தாதி சதகங்கள் ஆன சிறு

 நூல்பயில அண்டிவந் தவர்கள் ஒருசார்  

அரியதொல் காப்பியம் சித்தாந்த சாத்திரம்

 அறியவந் தவர்கள் ஒரு சார் 

மந்த்ரஉப தேசமது பெற்று சிவ பூசைசெய

 மருவிவந் தவர்கள் ஒருசார் 

மறைந்தநுண் பொருள்தமை விளக்குமொழி கேட்டுமே

 மகிழ்ந்திருப் பவர்கள் ஒருசார் 

இந்தமுறை மடாலயம் எங்கணும் கூட்டமாய்

 இரவுபகல் என்பது இன்றி  

இருந்துநின் மொழிகேட்டுப் புலவரா னோர்தமை

 எண்ணிடத் தகுவ தோதான்

பந்தமற ஞானமொழி பகர்கின்ற பானுவே

பான்மைதரு புலிசை வாழ்வே

பரிவுடைய சிவசண்மு கப்பெயர்கொள் தேசிகரின்

 பதமலர்கள் போற்றி போற்றி.” 

தமிழகத்தில் நாற்பத்தைந்து ஆண்டுகட்குமுன் ஞானியார் சுவாமிகள் என்றால், சிறார் முதல் முதியோர் வரை - கற்றவர் கல்லாதவர், தொழிலாளர் அரசு உயர் அலுவலர், ஏழையர் செல்வர் முதலிய பலரும் அறிவர். அருள்-மிகு சமயத்தலைவராயும் கற்றுத் துறைபோகிய பெரும் புலவராயும் தலைசிறந்த பேச்சாளராயும் திக்ழ்ந் தவர் திருவருட் செல்வர் தவத்திரு ஞானியார் அடிகளார். அவர்களிடம் முறையே பாடம் கேட்டுப் பெரும் புலவரான வர்கள் நூற்றுக் கணக்கானவர்கள். அடிகளாரின் சொற்