பிற்சேர்க்கை 2 தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி மலம் ஒரு மூன்றின்மயக்கம் அறுத்தே, ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால், ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி, ஆறாதாரத்து அங்குசநிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே, இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக் கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி, மூன்று மண்டலத்தின் முட்டிய துணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து, மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி, இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக துலமும் சதுர்முக சூக்கமும் எண்முகம் ஆக இனிதெனக்கு அருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிளட்டுநிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில்காட்டி, இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி, என்னை அறிவித்து, எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே, வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி, என்செவியில் 35 40 45 50 55 60 32
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/49
Appearance