பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

27


பராசக்தியானவள் வந்து நிற்கிறாள், குழந்தையின் உடம்பெல்லாம் திமிர்ந்து குளிப்பாட்டுவதற்கேற்ற நானப்பொடியும் மஞ்சளும் வைத்திருக்கிறாள். நீராட்டியபின் கண்ணுக்கு அழகுபெற இடுதவற்கான அஞ்சனமும் நெற்றியில் திலகமிடுவதற்கான சிந்துரமும் கொண்டுவந்திருக்கிறான்.

இவ்வளவையும் கற்பனை செய்துகொண்டு, 'ஐயா, அழேல்' என்று ஆழ்வார் கண்ணனைத் தாலாட்டுகிறார்:

மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள்
ஐயா! அழேல் அழேல தாலேலோ
அரங்கத் தணையானே! தாலேலோ

ஆழ்வார் தந்த தாலாட்டானது பின்னே தமிழிலக்கியம் விரிந்து வளர்வதற்கு எவ்வளவோ உதவி இருக்கிறது என்பதைக் காண்போம். பின்னாலே வந்த குலசேகராழ்வார், கணபுரத்தி லெழுந்தருளியுள்ள காகுத்தனைக் கண்டு வழிபட்டபோது, அக் காகுத்தனான இராமன் சரிதத்திலே ஈடுபட்டு, அச் சரிதத்தையே பத்துப் பாடல்கொண்ட ஒரு தாலாட்டுப் பதிகமாகப் பாடியருளினார்.

மன்னு புகழ்க் கௌசலை தன்
மணிவயிறு வாய்த்தவளே
தென்னிலங்கைச் கோன்முடிகள்
சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதிள் புடைசூழ்
கணபுரத் தென் கருமணியே