ராஜம் கிருஷ்ணன்
19
ஆனால் அப்பன் கை எழுத்துப் போட்டுக் கடன் வாங்கி இவளுக்குத் தருகிறான். அகலக் கால் வைத்து நட்டமானால்...?
ஆம், கால்காணி... ஆயிரம் ரூபாய்க்குள் செலவு செய்து போடப் போகிறாள்... எருவாகவும் நுண்ணுரட்டச் சத்தாகவும், நோய்களைத் தாக்காத மருந்தாகவும், கூலியும் கூடத்தான் கட்டுப்படியாகும்படி கடன் கொடுத்திருக்கிறார்கள். ‘பொம்புள என்ன கிழிப்பா?’ என்ற அலட்சியத்துக்கு நேர்நின்று காட்டுவோம்!
விடுவிடென்று வரப்பில் நடக்கிறாள்.
வயல் வரப்பு. நீர் ததும்பிய கோலம், பசுமை..
என்றுமில்லாத உற்சாகம் பொங்கி வழிகிறது. நீலவேணி, கன்னியப்பனின் ஆயா, அம்சு எல்லோரும் வந்திருக்கிறார்கள். ‘செவந்தியக்கோ’ என்ற கூவல் ஒலி கேட்கிறது. வரப்பின் ஓரத்தில் சுமையை இறக்க நீலவேணி வருகிறாள். இவளும் ஒரு உறவு முறைக்காரி. ரங்கனுக்குச் சின்னம்மாள் மகளாக வேண்டும். இருந்த பூமியை விற்று, பட்டணத்துக்குக் கொண்டு போய் பிஸினஸ் பண்ணித் தொலைத்து விட்டான். இவள் கூலி வேலை செய்கிறாள்.
“யக்கோ..!”
“ஓ... சாந்தி...! வாங்க வாங்க..! கன்னிப்பன் வந்து சொன்னாரா?”
“இல்ல... உங்களத்தான் வங்கி முன்ன பார்த்தனே? எல்லாம் வாங்கிட்டுப் போனீங்க. இன்னைக்குப் புதன் கிழமை- பயிர் வைப்பீங்கன்னு, புள்ளங்கள ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு ஓடி வந்தேன்.” கையில் மூங்கில் பிளாச்சில்