பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. வெள்ளிக்கிழமை
—மு. கருணாநிதி—

பெண்களுக்கு மங்கல அணியும், மஞ்சள் குங்குமமும் எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது வெள்ளிக்கிழமை!

வைதிகப் பெருமகனார் சிவநேசனின் திருமகள் சிந்தாமணி. அவளைப் பெண் பார்க்கப் பெங்களுரிலிருந்து அழகப்பன் என்னும் நிதிமிகு செல்வப் பிள்ளை வருகிறான்.

இச்செய்தி கேட்டு, சிந்தாமணியின் மாமன், மகன் ராமகிருட்டிணன் வெகுண்டெழுகிறான். ராமகிருட்டிணனுக்கு ‘டைகர்’ என்று ஒரு பட்டப்பெயர். அவன், பண்பியல்பாலும் புலிதான்!

ஒருநாள், சிந்தாமணி நீராடித் திரும்ப முனையும் நேரத்தில் டைகர் குறிபார்த்து வீசிய கல் தப்பாமல் தவறாமல் சிந்தாமணியின் தோள் பட்டையில் விழ அவ்வதிர்ச்சியின் விளைவாக, அவள் குளத்தில் வழுக்கி விழுகிறாள். தந்தை சிவநேசரும் தாய் சிவகாமியும் சிந்தாமணியை

141