பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

57

காலத்தில் உதவியவன். அவனிடம் கீழாக நடந்து கொள்ளாதே.

நீ இந்தச் சமுதாயத்தில் ஒரு குடிமகன் என்பதை நினைவில் கொள். நீ செய்த செயல்களை அடிக்கடி நினைத்துப் பார். தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவது தீங்கு செய்திருந்தால் அதற்குத் தக்க விலக்கினை உடனே தேடு.

அறம்

ஈகைக் குணம் படைத்தவனே மகிழ்ச்சியுடன் வாழ்பவன். அவனிடம்தான் அன்பும், அறிவும், சிந்தனையும் குடிகொண்டிருக்கும்.

அவன் உள்ளத் திலிருந்துதான் நல்லது வெளிப்படும். அவன்தான் மனித சமுதாயத்திற்கு நல்லது செய்வான். ஒருவர் இன்னற்படும்போது உதவிக் கை நீட்டுவான். ஏழைப் பங்காளனாக இருப்பான். சமுதாயம் முன்னேற்றம் அடைவதைக் கண்டு மகிழ்ச்சி கொள்வான். அவனைச் சுற்றி இருப்பவர்களைக் கடிந்து கொள்ள மாட்டான். பொறாமையுடன் இட்டுக்கட்டிப் பேசுபவர்களை நம்பமாட்டான். இழிமொழிகளை அறவே வெறுப்பான்.

அவன் எவரிடமும் பகையுள்ளம் கொள்ளமாட்டான். மன்னிக்க வேண்டியவர்களை

சி-4