உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தமிழக ஆட்சி



மதுரைக்கோட்டை மதில் மீது கீழ்வரும் போர்க்கருவிகள் இருந்தன என்று சிலப்பதிகாரம் செப்புகிறது: வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கரியவிரலை உடைய குரங்கு போல் இருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி, கல்லை உமிழும் கவண், காய்ந்து இறைத்தலால் சேர்ந்தாரை வருத் தும் நெய், செம்பை உருக்கும் மிடா, உருக்காய்ச்சி எறிவ. தற்கு எஃகு பட்டிருக்கும் உலைகள், கல் இட்டு வைக்கும் கூடை, தூண்டில் வடிவாகச் செய்து விடப்பட்டு வைத்து மதில் ஏறும் எதிரிகளைக்கோத்து வலிக்கும் கருவி, கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கவி, ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட உச்சியைக்கொத்தி மூளை யைக் கடிக்கும் பொறி வரிசைகள், மதில் மீது ஏறுவோரை மறியத் தள்ளும் இருப்புக்கவை, கழுக்கோல், அம்புக்கட்டு, ஏவறைகள், சிற்றம்புகள் வைத்து எய்யும் இயந்திரம், மதிலின் உச்சியைப்பிடிப்பவர் கைகளைக்குத்தும் ஊசிப் பொறிகள், பகைவர்மேல் சென்று கண்ணேக்கொத்தும் சிச்சிலிப்பொறி, மதில் உச்சியில் ஏறினவர் உடலைக் கொம்பால் கிழிக்க இரும்பால் செய்து வைத்த பன்றிப் பொறி, மூங்கில் வடிவாகப்பண்ணி அடிப்பதற்கு அமைத்த பொறி, கதவுக்கு வலிமையாக உள் வாயிற்படியில் நிலத்தில் விழவிடும் மரங்கள், கனேயமரம், விட்டேறு, குந்தம், ஈட்டி, நூற்றுவரைக்கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு

சகடப்பொறி, தகர்ப்பொறி, ஞாயில் (குருவித்தலே).”

விசயநகர வேந்தர் காலத்தில் வெடிமருந்தும் பீரங்கி களும் பயன்படுத்தப்பட்டன.

பெருவழிகள்

போருக்கு புறப்படுமுன் அரசன் தனது பலம், பணம், நாடு, காலம், மாற்றான் பலம் முதலியவற்றை ஆராய்வது.

1. காதை 15, வரி 207 - 27: உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/113&oldid=573631" இலிருந்து மீள்விக்கப்பட்டது